dinamalar telegram
Advertisement

தமிழக கட்சிகளின் தூக்கத்தை கலைக்கப் போகிறேன் என சொல்லுங்கள். பாராட்டுகள். எனினும், போராட்டம் வேண்டாமே!

Share
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி: வங்கதேசம் உட்பட அண்டை நாடுகளில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. ஆனால், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்படவில்லை. இதை போக்கும் விதமாக, வரும் 27ல் என் தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழக கட்சிகளின் துாக்கத்தை கலைக்கப் போகிறேன் என சொல்லுங்கள். பாராட்டுகள். எனினும், போராட்டம் வேண்டாமே!மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை: இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி எதுவும் இல்லை. என்றாலும், ஹிந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை, நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது, மத்திய அரசின் கடமை.

நியாயம் தான். நீங்கள் பல ஹிந்தி படங்களில் நடித்தீர்களே, அது எதற்காக என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை: ஐக்கிய நாடு சபையின் உலகளாவிய பட்டினி குறியீட்டில், பட்டினி அதிகரித்துள்ள 116 நாடுகளில் இந்தியா, 101-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளை விட, இந்தியாவில் அதிகரித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களிடம் புழங்க வேண்டிய பணத்தை எல்லாம், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பணமாகவும், சொத்தாகவும் சேர்த்து விட்டதால் ஏற்பட்ட சிக்கல் இதுவா?பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவை ஒட்டிய அரபிக் கடலில், தமிழக மீனவர்களை சுட்டு கொன்ற இத்தாலிய கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்டது போன்ற கடுமையான நடவடிக்கைகளை, தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படையினர் மீது மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

சொல்வதற்கு நன்றாகத் தான் இருக்கிறது... கேரள கடலில் நடந்தது அரிதான சம்பவம். ஆனால், தமிழக கடல் பகுதியில் அன்றாடம் நடக்கிறதே!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழர்களுக்கு மட்டும் தான் தமிழகத்தில் வேலை என்ற சட்டம் இயற்ற வேண்டும். அரசு பணிகளில், 100 சதவீதம், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில், 80 சதவீதம் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், உள்ளூர் மக்களுக்கு, உரிய இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

நல்லவேளை, தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைகளும் தமிழர்களுக்குத் தான் வழங்க வேண்டும்; வேறு மாநில முகங்களே தெரிய கூடாது என சொல்லாமல் விட்டீர்களே. உங்களை பின்பற்றும் சில குட்டிக்கட்சித் தலைவர்கள், அப்படி கூறுவர் பாருங்கள் விரைவில்!Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (23)

 • vbs manian - hyderabad,இந்தியா

  தமிழ் நாட்டில் எல்லா வேலையும் தமிழருக்கே என்றால் மற்ற மாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு அந்த மாநிலங்கள் நிர்பந்தம் கொடுக்க தொடங்கும். எல்லோரும் தமிழகம் திரும்பி வர வேண்டுமா. வேலை கிடைக்குமா. இந்த அளவு குறுகிய மனப்பான்மை அழிவில் முடியும். என்ன பேசுகிறோம் பின் விளைவுகள் என்ன என்று சிந்திக்காமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள். தேர்தல் இவர்களுக்கு தகுந்த பாடம் தொடர்ந்து எடுக்கும்.

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   நீயே மாட்டிக்கொண்ட, நீ இங்க கூவம் தான், என் எனில் கர்நாடக , ஆந்திர , மகாராஷ்டிர , MP எல்லாம் son of soil என்று ஆர்டெர் இருக்கு அது தெரியாம உளறிக்கொண்டு இருக்க, இங்கு உங்க விளங்கா மோதி paaneer, 2019 இல் ஒரு AMENDEMENT டெல்லி சொல்லி கொண்டுவந்தான் , EVEN OTHER SATATE ALSO APPLY என்று ஒரு வார்த்தை , TANGEDCO 380 AE / தமிழன் 12 பேர் தான் , மீதி அனைத்தும் வட நாடன் எல்லாம் அமித் சேட்டு கைங்கரியம் , யோசித்து பார் ஒரு சர்மா நம்ம ஊரில் TNEB Er வயிறு Eரிலையல / இதற்க்கு தான கடவுளே பொறுக்காமல் பழனியை ஓட விட்டார்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  அன்புமணி நீங்கள் இதை சொல்ல கூடாது. தேர்தல் வந்தால் பெரும் கட்சிகளிடம் தேசத்தை போராடும் நீங்கள் எல்லாம் மக்க்கலையை என்ன வென்று நினைக்கிறீர்கள். மற்றவர்கள் இடத்தைய வளைத்து போடும் யுங்கள் தந்தை யம் நீங்கள் மத்தியில் அமைச்சராக இருந்த ஓயாது அடித்த கொள்ளையையும் மக்கள் மறந்து விட வில்லைய.முதலில் நீங்கள் சுத்த மாக இருந்து கொண்டு பிறரைய குத்தம் சொல்லுங்கள். உங்கள் தந்தையின் ஆதி கால வாழ்க்கை எங்களுக்கு தெரியும்.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  அண்டைய நாட்டில் நம் ஹிந்து மக்கள் கொல்ல படுகிறார்கள் அது சில நொள்ளை கன்னர் களுக்கு படுவதில்லை. எதெற்கெடுத்தாலும் மோடியய் தாக்கும் இந்த திரைப்பட நடிகன் கமலா ஹாசனுக்கு மதம் மாறியதால் மத உணர்வு இல்லாமல் போகலாம் மனிதாபி மானம் கூட இல்லையா?

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   ஆமாம் அண்டைய நாட்டில் நம் ஹிந்து மக்கள் வாயை வெய்து கொண்டு சும்மா இருக்கனும், இப்போ நீ இங்கே கத்துற மாதிரி அங்கே கத்தினா வெத்தலை பாகு வெச்சி வரவேற்பான என்ன, பொழைக்க போன இடத்தில வழக்கு எதற்கு

 • DVRR - Kolkata,இந்தியா

  ராமதாஸ் Father's Name:Navaneetham Ammal Mother's Name :Sanjeevi Rayar???யாருங்க இவங்க ???தெலுங்கா கன்னடமா????

 • DVRR - Kolkata,இந்தியா

  எனக்கு வந்த வாட்ஸப் 1) 20-07-2021 Begum Khalidha Zia President, Bangla National Party I regret the continuing of massacre of Hindus & Buddhists in Bangladesh, but BanglaDesh is an Islamic Nation and not secular. Now the Muslims are in majority here. Under the circunmstances, If Hindus & Buddhists want to live safely, they should either convert to Islam or Go to India 2) BBC News Tamil : Sheikh Hasina வங்க தேசத்தில் நடந்த சம்பவத்துக்கு எதிர்வினை எதுவும் இந்தியாவில் நடந்தால் அதன் தாக்கம் வாங்க தேசத்திலும் கடுமையாக ஏற்படலாம் என்பதை இந்திய உணர்ந்து செயல்படவேண்டும் என்று ஷேக் ஹசினா தகேஸ்வரி தேசிய ஆலயத்தில் பக்தர்களிடையே பேசும் போது குறிப்பிட்டார். நான் இதுவரை நினைத்தது மூர்க்கன் முஸ்லீம் ஆண் என்று நினைத்தேன் இப்போது தான் தெரிகின்றது மூர்க்கள் முஸ்லீம் பெண் அதாவது முஸ்லீம் என்றால் தீவிரவாதிகள் அது ஆணோ பெண்ணோ சிறுவனோ சிறுமியோ கிழவனோ கிழவியோ என்று இப்போது தெளிவாகப்புரிகின்றது

Advertisement