dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தலுக்கு கோவை தயார் ! ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓகே

Share
Tamil News
கோவை:கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியை, 'பெல்' இன்ஜினியர்கள் நேற்று துவக்கினர்.கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.

மாநகராட்சியில் பயன்படுத்த, 6,459 பேலட் யூனிட், 2,071 கன்ட்ரோல் யூனிட்டுகள், உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை நகராட்சிகளுக்கு தேவையான, 1,171 பேலட் யூனிட், 2,151 கன்ட்ரோல் யூனிட், பேரூராட்சிகளுக்கு தேவையான, 3,229 பேலட் யூனிட், 1,030 கன்ட்ரோல் யூனிட்டுகள், வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.அவற்றை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணியில், 'பெல்' நிறுவன இன்ஜினியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
பொத்தான்கள் சரியாக இருக்கிறதா, பேட்டரி மாற்ற வேண்டுமா, இணைப்புகள் சரியாக இருக்கிறதா என, ஆய்வு செய்து தயார்படுத்தினர்.தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க, தேர்தல் பிரிவினருக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களை நியமித்து, ஆணையத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
இவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும்.நவ., 1ல் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலை ஆதாரமாகக் கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் விரைந்து தயாரிக்க வேண்டும்.கொரோனா தொற்று பரவல் தடுக்க முன்னெச்சரிக்கையாக, 1,050 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி தயார்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, பட்டியலை பிரித்தால் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகமாகி விடும். அலுவலர்கள் நியமிப்பது, இயந்திரங்கள் தேவை உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக இருக்கும் என்பதாலும், தொற்று கட்டுக்குள் இருப்பதால், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி ஏற்படுத்தலாம் என, கலெக்டர்கள் தரப்பில், ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகளாக தகுதி உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும், வார்டு மறுவரையறை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.மற்ற உள்ளாட்சி அமைப்புகளில், பழைய வார்டுகள் அடிப்படையிலேயே தேர்தல் நடத்த, ஆணையம் திட்டமிட்டு இருப்பதால், இதர பணிகளை விரைந்து முடிக்க, அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    எதுக்குங்க 2 1/2 மணிநேரம் படம் பார்க்கணும். ஹீரோ தோத்ததா தமிழில் படங்கள் எடுத்தால் ஓடாது. இந்த தடவை மணிகள் சத்தமெல்லாம் வெளியே கேட்கவே வுடமாட்டாங்க. கதவை மூடி வச்சிடுவாங்க.

Advertisement