dinamalar telegram
Advertisement

19 லட்சம் ; இதுவரை செலுத்திய தடுப்பூசி டோஸ்கள்... மாவட்டத்தில் 5 நாள் சிறப்பு முகாமில் விர்

Share
Tamil News
இந்தியாவில் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி16ம் தேதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மாநில அரசுகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசுகொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது.18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், தீவிரப்படுத்த வாரந்தோறும் சிறப்பு முகாம்கள்நடத்தப்படுகிறது. அதனால், 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கைஇந்தியா எட்டியது.

மாவட்டத்தில் இது வரை தடுப்பூசி செலுத்த தகுதியான 22லட்சம் பேரில், நேற்று வரை 19 லட்சத்து 4 ஆயிரத்து 117 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 14லட்சத்து 23 ஆயிரத்து 228 பேர்முதல் தவணையும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 889 பேர் இரண்டாவதுதவணை செலுத்திக் கொண்டுள்ளனர்.இதில், 44 வயதிற்குட்பட்டவர்கள் 11 லட்சத்து 2 ஆயிரத்து 866 பேர், 45ல்இருந்து 60 வயதிற்குட்பட்டோர் 5 லட்சத்து 28 ஆயிரத்து 921 பேர், 60வயதுக்கு மேற்பட்டோர் 2 லட்சத்து 72 ஆயிரத்து 330 பேர் தடுப்பூசிபோட்டுள்ளனர்.கொரோனா தொற்றை முற்றிலும் தடுக்க, தடுப்பூசி பணியைதீவிரப்படுத்த கடலுார் மாவட்டத்தில் அனைத்துஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள்,தாசில்தார், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில்நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிவளாகங்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 950இடங்களில் வாரந்தோறும் சிறப்பு முகாம்கள்நடத்தப்படுகிறது.மாவட்டத்தில் கடந்த மாதம் 12ம் தேதி, 19, 26 மற்றும் கடந்த 3ம் தேதி மற்றும் 10ம் தேதி ஆகிய ஐந்து நாட்கள் சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டுள்ளது. இதில் மட்டுமே 4 லட்சத்து 39 ஆயிரத்து 646பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடலுார்மாவட்டத்தில் ஆரம்பத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிய நிலையில்,தற்போது தாராளமாக செலுத்தப்படுகிறது. இது தவிர, அவர்கள்இடங்களுக்கே சென்று செலுத்தும் வகையில் வாரந்தோறும் சிறப்புமுகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும், தடுப்பூசியை அனைவரும்செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில்கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்கு வந்ததற்கு இதுவும் ஒரு காரணம், என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement