ஹெத்தையம்மன் கோவில் அரசு எடுக்க எதிர்ப்பு
கோத்தகிரி : நீலகிரி ஹெத்தையம்மன் கோவில் உட்பட, 49 கோவில்களை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதை கைவிட வேண்டும்' என, ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில், ஒரு கால பூஜை கூட நடப்பதில்லை. கோத்தகிரி ஹெத்தையம்மன் கோவில் உட்பட, 49 கோவில்களை அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதை கைவிட வேண்டும்.
ஹெத்தையம்மன் கோவில் என்பது ஒரு மனை (வீடு). ஹெத்தை மனையை அறநிலையத்துறை எடுக்க கூடாது.கோவில் நகைகளை உருக்கி கட்டியாக்கி 'டெபாசிட்' செய்யும் நடவடிக்கையில், ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. அதை கண்டித்து, வரும், 26ம் தேதி மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!