dinamalar telegram
Advertisement

பயிற்சியில் இந்தியா இரண்டாவது வெற்றி அரைசதம் விளாசினார் ரோகித் சர்மா

Share
துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடர் இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரோகித் சர்மா அரைசதம் அடித்து கைகொடுத்தார்.
எமிரேட்சில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் நேரடியாக 'சூப்பர்-12' சுற்றில் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் அக். 24ல் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்குத் தயாராகும் வகையில் நேற்று தனது இரண்டாவது பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
கோஹ்லிக்குப் பதில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா களமிறங்கினார். 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், வார்னர் ஜோடி துவக்கம் கொடுத்தது. போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய அஷ்வின், 5வது பந்தில் வார்னரை (1) அவுட்டாக்கினார். அடுத்த பந்தில் மிட்சல் மார்ஷையும் (0) வெளியேற்றினார். தன் பங்கிற்கு பந்தை சுழற்றிய ஜடேஜா, தனது முதல் பந்தில் பின்ச்சை (8) 'பெவிலியன்' அனுப்பி வைத்தார். மேக்ஸ்வெல் 37, ஸ்மித் 57 ரன்னில் திரும்பினர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்தது.


அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ராகுல் 39 ரன்னுக்கு அவுட்டானார். ரோகித் 41 பந்தில் 60 ரன் எடுத்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் (38), பாண்ட்யா (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement