dinamalar telegram
Advertisement

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமனம்

Share
சென்னை: தமிழகம் முழுவதும் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக, மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்வதற்காக, அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவை வருமாறு:
சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு,

தேனி மாவட்டத்திற்கு கூட்டுறவு, புள்ளியியல் துறை அமைச்சர் பெரியசாமி.

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு,

தர்மபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,

திருநெல்வேலி மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்,

திருவாரூர் மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி,

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • kmathivanan - Trichy ,இந்தியா

  இப்போ அதிகாரபூர்வ commission ஏஜென்ட் நியமனம், குடும்பத்துக்கு கொட்டி கொடுக்க எல்லாம் தயார் , சொரிஞ்ச கை சும்மா இருக்குமா

 • ஆரூர் ரங் -

  வருவாய் வாரியாக மாவாட்ட மந்திரிகள்😅😅.. நியமனம்

 • அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

  ஸ்டாலின் க்கு கட்டம் சரி இல்லை என்று சொன்னவன் எல்லாம் இப்போ ராஜபவன் ஓடி கொண்டு இருக்கிறான்

 • ஆரூர் ரங் -

  சற்று மாற்றி.. அந்த அமைச்சர்கள் துரிதமாக வளர... (பிறகு கப்பம் 😅கட்ட)

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  முதல்வர் கான்வாயில் வாகனங்கள் குறைப்பு.. நல்ல முடிவு.. தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு நீதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்க வேண்டாம், யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது என்றும், அடுத்தநாளே இதுதொடர்பாக போக்குவரத்தை சீரமைத்ததற்கு நன்றி. நீதிபதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அப்போது குறுக்கிட்ட உள்துறை செயலாளர் பிரபாகர், முதல்வரின் கான்வாய் 12 வாகனங்களில் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், எதிரில் வரும் வாகனம் நிறுத்துவது இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர், டிஜிபி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதி, முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். சூப்பர் ஸ்டாலின் அவர்களே

Advertisement