dinamalar telegram
Advertisement

உ.பி.,யில் 3 நிமிடத்தில் 3 கி.மீ., சென்று தற்கொலையை தடுத்த போலீசார்

Share
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தையை காக்க கோரி, மகள் விடுத்த அழைப்பை ஏற்று, 3 கி.மீ., தொலைவை 3 நிமிடங்களில் கடந்து வந்த போலீசார், தற்கொலையை தடுத்து நிறுத்தி உள்ளனர்.


உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டத்தில் ஒரு கிராமத்திலுள்ள ஒரு வீட்டில், தன் தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தந்தை தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும்; விரைந்து வந்து காப்பாற்றும் படியும் போலீஸ் அவசர உதவி எண்ணை (முதலில் 100 தற்போது 112) அழைத்து மகள் கோரியுள்ளார்.



போலீசாருக்கு இந்த அழைப்பு பகல் 2:10 மணிக்கு வந்துள்ளது. தங்களது வாகனத்தை அதிவேகமாக இயக்கிய போலீசார், 3 கி.மீ., தூரத்தை மூன்றே நிமிடங்களில் கடந்து, 2:13க்கு போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். ஜன்னல் வழியாக தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்ட போலீசார் கதவை உடைத்து தூக்கிட்டிருந்தவரை மீட்டனர். உடனடியாக முதலுதவி கொடுத்து அவரை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர். துரிதமாக செயல்பட்ட துணை ஆய்வாளர் ஷிவ்தாஸ் மற்றும் ஓட்டுநர் பிரேம் நாராயண் ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • பச்சையப்பன் கோபால் புரம் -

    அப்படி வேகமாக செல்லும் போது எத்தனை உயிர்களை எடுத்தார்களோ!!!! இதெல்லாம் ஒரு சாதனையா???

  • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

    அருமை. இப்படி வேகம் காட்டினால் மக்கள் மனதில் நல்ல இடம் கிடைக்கும்.

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    பாராட்டுகள் அந்த பெண்ணுக்கும்

  • Ravanan Ramachandran - Chennai,இந்தியா

    சூப்பர் ....போலீசாரை பாராட்டியே ஆக வேண்டும் ....மிக வேகமாக சென்று ஒரு உயிரை காப்பாற்றி உள்ளனர்.

Advertisement