dinamalar telegram
Advertisement

ஆமதாபாத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுபாட்டில்கள் அழிப்பு

Share
ஆமதாபாத்: ஆமதாபாத்தில், போலீசார் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 12 ஆயிரத்திற்கும் அதிகமான, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.


இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆமதாபாத் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல இடங்களில் 12,384, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை, இந்தியாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் ஆகும். இவற்றின் மதிப்பு ரூ.72.92 லட்சம். இவற்றை, இன்று(அக்.,20) கோடா பகுதியில், துணை கமிஷனர் ரவீந்திர படேல் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில், புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன.



சோலா உயர்நீதிமன்ற போலீஸ் ஸ்டேசன், நரன்புரா போலீஸ் ஸ்டேசன், வஸ்திராபுர் போலீஸ் ஸ்டேசன், வதாஜ் போலீஸ் ஸ்டேசன் மற்றும் கட்லோடியா போலீஸ் ஸ்டேசன்களில் இந்த சட்ட விரோத மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • r ravichandran - chennai,இந்தியா

    குஜராத் மாநிலத்தில் பூரண மது விலக்கு உள்ளது. இருப்பினும் அண்டை மாநிலமான மும்பையில் இருந்து தினமும் இரயில் , கார் மூலம் கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். எவ்வளவோ முயன்றும் காவல் துறை இதை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. நான் அங்கு ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாதம் தங்கி இருந்தேன். தினமும் ஏதாவது ஒரு இடத்தில் ரெய்டு நடக்கும். என்னுடன் வந்த நண்பர் ஒருவர் மது வாங்க ஏறக்குறைய 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் ரகசியமாக சென்று வந்தார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒன்று அரசே விற்பனை செய்யும் அல்லது விற்பனை செய்ய லைசென்ஸ் வழங்கி வருமானத்தை பெருக்கி கொள்ளும். ஆனால் குஜராத்தில் இந்த ரெண்டும் இல்லை. அண்டை மாநிலமான மும்பையில் இருந்து கடத்தி வரும் மது பானம் தான் விற்பனை செய்ய படுகிறது.

  • அப்புசாமி -

    எங்கேயோ, யாருக்கோ போய்ச்சேர வேண்டிய மாமூல் போகலை. இல்லேன்னா, தொழில் போட்டியில் போட்டுக் குடுத்துட்டாங்க. பூரண மதுவிலக்கு. இப்புடித்தான் ஆட்சி செஞ்சாரு ஒரு பெரியவர்.

  • அப்புசாமி -

    பூரண மதுவிலக்கு அமலில் இருக்கு குஜராத்ல... ஆனா உள்நாட்டு சரக்கு கிடையாது. எல்லாம் ஃபாரின் சரக்குதான். சட்டப்படி தயாரிக்கிறாங்கோ...

  • GANESUN - Delhi,இந்தியா

    வருக வருக..இந்த தொழிலதிபர்களை டாஸ்மாக் வரவேற்கிறது.

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இப்படி பட்ட சட்ட விரோத மதுவிற்பனை தவிர்க்க தான் அரசே நாங்களே மதுவிற்பனை செய்கிறோம் அப்படி தானே அடிமை பாய்ஸ் .....

    • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

      அங்கெ எந்த ஆட்சி நடக்குது ...

Advertisement