dinamalar telegram
Advertisement

உச்சத்தில் எரிபொருள் விலை: டீசலுக்காக கர்நாடக அரசு பஸ் கடத்தல்!

Share
பெங்களூரு: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் வாகனங்களில் எரிபொருள் திருட்டு அதிகரித்துள்ளன. கர்நாடகாவில் டீசலுக்காக அரசு பஸ் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வானங்களிலும், பார்க்கிங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகனங்களிலும் எரிபொருள் திருடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் குப்பி பேருந்து நிலையத்தில், கடந்த 17ம் தேதி இரவு, 9:40 மணியளவில் அரசு பஸ்சை டிரைவர் நிறுத்திவிட்டு சென்றார். பின் காலை 6:00 மணிக்கு வந்த போது பஸ் கடத்தப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து போலீசில் டிரைவர் புகார் அளித்தார். பஸ்சில் ஜிபிஆர்எஸ் வசதி இருந்ததால் பஸ் இருக்கும் இடத்தை போலீசார் எளிதாகக் கண்டுபிடித்தனர்.



குப்பி பேருந்து நிலையத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள ஜன்னேனஹள்ளி அருகே ரோட்டோரத்தில் பஸ் அநாதையாக நின்றிருந்தது. பஸ்சை ஆய்வு செய்த போது, அதில் டீசல் மட்டும் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. பஸ்சை மீட்ட போலீசார், பஸ்சைக் கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.


பெங்களூருவில் நேற்று பெட்ரோல் விலை ரூ.109.89, டீசல் ரூ.100.75க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (22)

  • அப்புச்சமி -

    இது வெறும் டிரெய்லர் தான். இன்னும் கொஞ்சநாளில் டீசல் டேங்க்கர் லாரிகளையே கடத்திருவானுக. மொத்தமா ஒரு 10000, 20000 லிட்டர் சுட்டுரலாம். அச்சேதின் ஆநே வாலே ஹைன்...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    குன்றிய சர்க்காரின் சாதனை பட்டியலில் இதை சேர்த்துக் கொள்ளலாம்..

  • ஆரூர் ரங் -

    அதனால் தேர்தல் வாக்குறுதிப்படி ஸ்டாலின் இன்றிரவு முதல் டீசல் விலையை ஐந்தைந்து ரூபாயாக🤭🤭 குறைப்பார். 😉😉பிறகு படிப்படியாக வசூல்

    • Priyan Vadanad - Madurai

      இவர் தினமலர் வாசகர்களில் சிரிப்பு வாசகராக இருப்பாரோ சும்மா சும்மா ஜோக்கடிக்கிறார். ஆனால் கடி ஜோக்காக இருக்கிறது.

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை

      ஆமா ஸ்டாலின் அவர்கள் விலையை குறைப்பார்.. குன்றிய கொள்ளைக்கூட்டம் அதையும் வழிச்சி எடுத்து திருடி முதலாளி காலடியில் கொண்டுபோய் கொட்டும்.. முதலில் குறைத்த அந்த 3 ரூபாயையும் அப்படித் தானே வழிச்சி எடுத்து திருடிட்டு அதுக்கு மேலேயும் பத்து ரூபாயை ஏத்தி.. சாதாரண மக்களை நசுக்கி துன்புறுத்துவதில் என்ன சுகம் கிடைக்கிறதோ தெரியவில்லை இந்த பா-சீசா கூட்டத்துக்கு..

    • Dhurvesh - TAMILANADU

      இவன் முட்டுகுடி ரங் , அப்போ கூட கேடிஜி குறைப்பர் என்று சொன்னானா பாருங்கள் இந்த பெரிசுகேடி

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    'குஷிநகர்' ஏர்போர்ட்டு ஏராப்லானுலேந்தும் சொட்டு உடாமெ பெட்ரோல திரிடிருப்பானுங்க

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    'ஆத்ம நிர்பாார்'ர கொடி கெட்டி பறக்க வெச்சிட்ருக்கான்

Advertisement