dinamalar telegram
Advertisement

போலீஸ் காவலில் இறந்தவர் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா தடுத்து நிறுத்தம்

Share
லக்னோ: போலீஸ் கஸ்டடியில் இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவை உ.பி., போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு விளக்கமளித்துள்ள உ.பி., போலீசார் உரிய அனுமதியை பெறாததால், பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ரூ.25 லட்சம் திருட்டு வழக்கில் கைதான அருண் வால்மிகி என்பவர் போலீஸ் கஸ்டடியில் விசாரணையின் போது உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை காண காரில் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவை லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக பிரியங்கா டுவிட்டரில் பதிவிட்டதாவது: அரசு பயப்படுவது ஏன்? அருண் வால்மிகி போலீஸ் கஸ்டடியில் இறந்துள்ளார். அவரது குடும்பத்தினர் நீதிக்காக போராடுகின்றனர். அவர்களுக்கு நான் ஆறுதல் கூற விரும்புகிறேன். உ.பி., அரசு பயப்படுவது ஏன்? என்னை தடுத்து நிறுத்தியது ஏன் ? இன்று வால்மிகி பிறந்த நாள். பிரதமர் புத்தர் குறித்து பேசுகிறார். ஆனால், இன்று நடந்த சம்பவம், அவரது கருத்திற்கு எதிராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற பிரியங்காவை தடுத்து நிறுத்திய போலீசார், தற்பாது அருண் வால்மிகி குடும்பத்தினரை சந்திக்கச் செல்வதையும் தடுத்து நிறுத்துகிறது என தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • குமார் - ,

    ராஜஸ்தான்ல ஒரு தலித்தை அடித்து கொன்று இருக்கிறார்கள் அங்கு போக வேண்டியது தானே ஓ அங்க காங்கிரஸ் ஆட்சியா அப்போ செலக்ட்டிவி பொங்கல் தான்

  • Aarkay - Pondy,இந்தியா

    யக்கோவ் காஷ்மீரில் இறந்தவர்களுக்கும் குடும்பமிருக்கிறது. பிச்சையிலும் பிச்சை, கௌரவ வோட்டு பிச்சை

  • N S Sankaran - Chennai,இந்தியா

    அக்காவும் தம்பியும் எழவு வீட்டுக்கு மட்டும் போவதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள். பேசாமல் கையில் ஒரு சங்கையும் சேகண்டியும் கொண்டு சென்று தொழிலாகவே செய்யலாம்.

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கேவலமான செயலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படுவோரின் குடும்பத்தை சந்திக்க செல்லாதது ஏன் பயமா

  • Raj - nellai,பஹ்ரைன்

    யோகியின் அராஜகம்

    • Krishna - ,

      SORIYAAN SISHYAN TASMAC MATTAI RAJ PONDRA KOMAALIKKU POONAI MELA MADHIL ARIVU JEEVI AATCHI MATTUME PIDIKKUM

    • Aarkay - Pondy,இந்தியா

      ஹவாலா ஒட்டகத்தின் புலம்பல்

Advertisement