dinamalar telegram
Advertisement

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Share
Tamil News
கடலுார் : ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வட்டார மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் நிலையில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி பதவி உயர்வு அளிக்க வேண்டும. கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஊரக வளர்ச்சி துறை பணியாளருக்கு அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


சங்க ஒன்றிய கவுரவ தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அய்யனார், பொருளாளர் சங்கர், தூய்மை பணியாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவநாதன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் வேலவன், ஒன்றிய செயலாளர் திருவேங்கடம் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தூய்மை பணியாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜெயந்தி, ஒன்றிய துணைத்தலைவர் அன்பரசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வேங்கடகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பதினெட்டுவருஷமாக தற்காலிகம் ஆனால் ஐம்பத்தெட்டு இருந்து அறுபதுவரை ஓய்வுபெறும் வயது நீட்டியிப்பு இதெல்லாம் முரணாக உள்ளது ஐம்பத்தெட்டு வயதானால் ஓய்வுகொடுங்க பத்தாண்டு தாற்காலிகப் பணியாளரை நிரந்தரம் செய்யுங்கள் ஐயா பாவம்

  • duruvasar - indraprastham,இந்தியா

    நல்லாட்சியை சீர்குலைக்க செய்யும் பிற்போக்கு சக்திகளின் சதி வலையை விரைவில் போலீஸின் மென்கரம் கொண்டு வருடிவிடும் வித்தையை ( வழக்குகள்) முடிக்கிவிட வேண்டியதுதான்.

Advertisement