dinamalar telegram
Advertisement

பூட்டியே கிடக்கும் பூங்காக்கள் பல்லாவரம் மக்கள் கொதிப்பு

Share
Tamil News
குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கும் பூங்காக்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாதது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


பூங்காக்களை திறக்காதது ஏன் என, நலச்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல்லாவரம் நகராட்சியில், 47 பூங்காக்கள் உள்ளன. பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த இப்பூங்காக்களை, ஒரு வருடமாக, கண்டுக்கொள்ளவில்லை.பராமரிப்பு என்ற பெயரில், மாதந்தோறும், பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்படுவதாக எழுந்த. புகாரை அடுத்து, பராமரிப்பு பணியை மேற்கொண்டு வந்த நிறுவனத்திற்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இதனால், அனைத்து பூங்காக்களையும் பூட்டி மூடிவிட்டனர். சில இடங்களில் மட்டும், அப்பகுதி மக்கள் பூங்காக்களை திறந்து பயன்படுத்திவிட்டு, மீண்டும் பூட்டி செல்கின்றனர். பல இடங்களில், பூட்டு போட்டு மூடிய நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, சுபம் நகரில் உள்ள மூன்று பூங்காக்களும், பல நாட்களாக பூட்டியே வைத்துள்ளனர்.இதன் காரணமாக, முதியோர் மற்றும் பெண்கள் நடைப்பயிற்சி செய்ய முடியாமலும், குழந்தைகள் விளையாட முடியாமலும் தவிக்கின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம், பூங்காக்களை நேரடி கட்டுப்பாட்டில் பராமரித்து, தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறங்களிலேயே, பூங்காக்கள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், பல்லாவரத்தில் மட்டும் பூங்காக்கள் பூட்டியே கிடப்பது ஏன் என, நலச்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • ஜி.பாகுபலி - Chennai,இந்தியா

  தமிழகத்தில் பல இரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன மத்திய அரசுக்கு நமது எம்பிக்கள் வலியுறுத்துவதே இல்லை என்பது வருந்ததக்க செய்தி முக்கியமாக திண்டிவனம் டூ நகரி ,திருவண்ணாமலை சென்னை டூ கடலூர் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம்

 • ஜி.பாகுபலி - Chennai,இந்தியா

  நமது தமிழ்நாட்டில் எந்த திட்டமும் விரைவாக முடிப்பதில் லை உதாரணமாக பீச்யிலிருந்து பரங்கிமலை பறக்கும் ரயில் மதுரவாயில் டூ துறைமுகம் சாலை சென்னையில் பல சாலைகள் அகலப்படுத்த 20 ஆண்டுகளாக அகலப்படுத்த படும் என அரசியல் வாதிகள் கூறிகொண்டே சென்றுவிட்டனர் இதுதான் உண்மை

 • duruvasar - indraprastham,இந்தியா

  உள்ளே மக்கள் பணி நடந்துகொண்டிருக்கும். மக்கள் பயன்பாட்டிற்க்கு இதைவிட பெரியதாக 500 கோடி ரூபாய் செலவில் கருணாநிதி நினைவு பூங்கா அமைக்கும் அறிவிப்பு பல்லாவரம் நகராட்சி தேர்தலுக்கு முன்பு எதிர்பார்க்கலாம்.பல்லாவரத்திற்க்கும் திமுக தலைவர்களுக்கும் ஒரு பந்தம் உண்டு.

  • Bhaskaran - Chennai,இந்தியா

   மக்கள் பணியா அப்படீன்னா

 • Bhaskaran - Chennai,இந்தியா

  செயல் படாத நகராட்சி ஊழலில் முதல் பரிசு எப்போதும் பல்லவரத்துக்கே அதை யாரும் பீட் செய்யமுடியாது

Advertisement