dinamalar telegram
Advertisement

கிணற்றில் மிதந்த உடல்

Share
திருப்புவனம்: திருப்புவனம் அருகே கிணற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் 45 வயது நபரின் உடலை போலீசார் மீட்டனர். வன்னிக்கோட்டை கிராமத்தில் உள்ள கிணற்றில் 45 வயதுள்ள நபர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. திருப்புவனம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இறந்தவர் மதுரையை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

புள்ளிமான் பலி

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே மணமேல்பட்டியில் நாய்கள் கடித்து புள்ளி மான் பலியானது. இப்பகுதியில் மான்கள் அதிகம் வசிக்கின்றன. தண்ணீர் அருந்த ரோட்டிற்கு வந்த புள்ளி மான் ஒன்றை அப்பகுதியில் திரிந்த நாய்கள் விரட்டி கடித்தன. இதில் புள்ளிமான் பலியானது. கால்நடை டாக்டர் பாலகிருஷ்ணன் பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement