dinamalar telegram
Advertisement

மேலுார் -- காரைக்குடி 4 வழிச்சாலை 2 ஆண்டுகளாக கிடப்பில் பணிகள்

Share
திருப்புத்துார் : திருப்புத்துார் பகுதியில் மதுரை -- காரைக்குடி நான்கு வழிச்சாலைக்கான பூர்வாங்க பணிகள் கூட துவங்க வில்லை என புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 425 கி.மீ.,துாரத்திற்கு நான்கு வழிச்சாலை பணி நடக்கிறது. அதன்படி 45.85 கி.மீ., துாரமுள்ள மேலுார் -- பிள்ளையார்பட்டி -- காரைக்குடி வரையிலான நான்கு வழிச்சாலை பணிக்கு ரூ.767.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.2 ஆண்டுக்குள் இப்பணி முடிக்க வேண்டும். ஆனால் மேலுார் வரை மட்டுமே பணிகள் துரிதமாக நடக்கிறது.

திருப்புத்துார் பகுதியில் பூர்வாங்க பணிகள் கூட தொடங்கப்படாத நிலை உள்ளது.ஏற்கனவே கொரோனா காரணமாக ஊழியர்களின்றி பணிகள் மந்த நிலையில் கிடந்தன. இதற்கிடையில் பட்டாக்குறிச்சி, காட்டாம்பூர், தேவரம்பூர், தென்மாபட்டு போன்ற பகுதியில் நிலம் வழங்கியவர்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்யவில்லை எனக்கூறி எதிர்ப்பு தெரிவிப்பதால் அப்பகுதியில் பூர்வாங்க பணிகள் கூட தொடங்கவில்லை.அரசு தலையிட்டு நில மதிப்பீடு தொகையை விரைந்து வழங்கி நான்கு வழிச்சாலை பணிகளை காரைக்குடி வரை விரைந்து முடிக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement