திருப்புவனம்:''சென்னை ஐ.ஐ.டி., நிபுணர்களின் ஆய்வுக்கு பின், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் கட்டும் பணி துவக்கப்படும்,'' என, தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், அகழாய்வு இடங்களை நேற்று பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:முதன் முறையாக கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க உள்ளோம்.சென்னை ஐ.ஐ.டி., நிபுணர் குழு செங்கல் கட்டுமானம், உறை கிணறுகளை ஆய்வு செய்து காட்சிப்படுத்த ஆலோசனை வழங்கிய பின், திறந்தவெளி அருங்காட்சியகம் கட்டும் பணிகள் நடக்கும்.
இங்கு நடந்த ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டறிந்த வெள்ளி முத்திரை நாணயம் வணிக தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளது.கீழடியில் கிடைத்த உறை கிணற்றின் பக்கவாட்டில் மீன் உருவம் உள்ளது. எட்டாம் கட்ட அகழாய்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!