dinamalar telegram
Advertisement

காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறது; இத்தனை ஆண்டுகளாக அரசியலில் உள்ளது...

Share
தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேச்சு:விஜய் போன்ற பிரபல நடிகர்கள் பொது வாழ்க்கைக்கு வரும்போது, நடிகர் என்ற முத்திரையோடு மட்டும் வருவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல; அரசியல் கொள்கையை முன்னிறுத்தி வர வேண்டும்.

காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறது; இத்தனை ஆண்டுகளாக அரசியலில் உள்ளது... சரி, அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற கட்சிகளுக்கும் கொள்கை எதும் இருக்கிறதா?நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: சென்னை கொளத்துாரில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பிலான அரசு கலைக்கல்லுாரியின் ஆசிரியர் பணிக்கு, ஹிந்துகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

ஹிந்து சமய அறநிலையத் துறை நடத்தும் கல்லுாரி அது. பக்தர்களின் பணத்தில் உருவான கல்லுாரி. அங்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே இடம் என்பது தான் நியாயமாக இருக்கும். கிறிஸ்துவ, முஸ்லிம் கல்லுாரிகளுக்கு சென்று பாருங்கள்!தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை: ரொம்ப காலத்திற்கு பின், சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்தேன். ஏற்பாடுகள் அருமையாக இருந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலக பாதுகாப்பு வீரர்களுக்கு, ஆங்கிலம், தமிழ் தெரியவில்லை. ஹிந்தியில் பேசும்படி என்னை மிரட்டினர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று காவலர்களாக வந்துள்ள அவர்களிடம் போய், ஆங்கிலத்தில் பேசினால், அவர்களுக்கு பதிலளிக்கத் தெரியாது அல்லவா... எனவே, நாம் தான் அவர்களுக்கு புரியும் பாஷையில் பேச வேண்டும்!தமிழக காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை: நாம் தமிழர் என்ற, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு பா.ஜ., அடிவருடி. தமிழகத்தில், தங்களால் நேரடியாக களமிறங்கி மத, கலவர அரசியலை செய்ய முடியவில்லை என்பதால், சீமானை பா.ஜ., களமிறக்கியிருக்கிறது.

என்னவொரு அற்புதமான சிந்தனை... உங்களுக்குத் தான் உயரிய, 'நோபல்' பரிசு வழங்கப்பட வேண்டும்!தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் அறிக்கை: தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை, பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சட்ட திருத்தத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

அந்த சட்டத்தை விரைவில் ரத்து செய்யும். அப்படியே, வேலை, படிப்புகளில் சேர எந்த தேர்வும் எழுதப்பட வேண்டிய தேவையில்லை என்றும் சொல்லும். பொறுத்திருங்கள்!
தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: 'புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி நினைவிடங்களில் புரட்சித் தாய் அஞ்சலி செலுத்தினார்' என, சிலர் கூறுகின்றனர். புரட்சி என்பது சமுதாய அமைப்பையே புரட்டிப் போடுவது. இந்த மூவருக்கும், புரட்சிக்கும் என்ன சம்பந்தம்? புரட்சியை மலிவுபடுத்தும் வேலை இன்னும் முடியவில்லை.

புரட்சி என்ற வார்த்தை கம்யூ.,க்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை, அ.தி.மு.க.,வினர் உணராமல் இருக்கின்றனரோ!Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

 • சந்திரசேகர் -

  ஜோதிமணிக்கு எதையாவது பேசி மீடியாவில் பேர் வந்து கொண்டே இருக்கனும்.இல்லைன்னா எல்லோரும் மறந்து விடுவார்கள் என்று நினைப்பு. திமுகவின் மறு கட்சிதான் காங்கிரஸ்.பீட்டர் அல்போன்ஸ் அற்புதமாக திமுக கொள்கை பரப்பு செயலாளராக செயல் படுகிறார். நானும் எத்தனையோ தடவை விமானபயணம் செய்திருக்கிறேன்.ஆனால் என்னை ஒருவரும் மிரட்டியது இல்லை. ஏனென்றால் பாதுகாப்பு படை வீரர்கள் யாரிடமும் தேவையில்லாமல் பேச மாட்டார்கள்.அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் காண்பித்தால் அதை பார்த்து எல்லாம் சரியாக இருந்தால் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.நாமும் அவர்களிடம் ஏதும் பேச வேண்டிய அவசியம் இல்லை.நான் நினைக்கிறேன் அமெரிக்க நாராயணன் தன்னுடைய அமெரிக்க புலமையை வெளிக்காட்ட முயன்று இருக்கிறார்.

 • DVRR - Kolkata,இந்தியா

  காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறது "கொள்கை"யை "கொள்ளை" என்று படித்து அதை மட்டும் தான் செய்கின்றார்கள் . "ஜன சேவை" இதை பண சேவை என்று படிக்கின்றார்கள் எல்லா காங்கிரஸ் அரசியல்வாதிகளும்

 • S. Narayanan - Chennai,இந்தியா

  வேல்முருகன் அவர்களுக்கு தெரியுமா தமிழக அரசு எல்லோருக்கும் விரைவில் பட்டம் கொடுக்கப்போகிறது. யாருக்கு எத்தனை பட்டம் தேவையோ அதை அவர்கள் தங்கள் ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ளலாம். படிக்காமல் பட்டம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த உண்மையான விடியலை திமுக அரசு கொடுப்பது மிகவும் ஆறுதலாக இருக்கிறது.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  அப்போ சீமான் எலக்சன் செலவு செய்தது எல்லாம் பா. ஜா. கோத்தா பணம் என்று ஜோதிமணி கூறுகிறார் போல.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  அமெரிக்க நாராயணனுக்கு இப்போது புரிந்திருக்கும் எதற்கு ஹிந்தி படிக்க வேண்டும் என்று. ஆனால் தமிழக அரசோடு சேர்ந்து கொண்டு ஹிந்தி மற்றும் நீட் தேர்வு தேவை இல்லை என்று சொல்லி மக்களை முட்டாளாக்கி வேடிக்கை பார்த்து நாட்டையே கெடுத்தால் நாடு எப்படி உருப்படும்.

Advertisement