dinamalar telegram
Advertisement

வேளச்சேரி வாசுதேவ பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு: ஹிந்து அறநிலையத்துறை தன் வசப்படுத்துமா?

Share
வேளச்சேரி: ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள வேளச்சேரி வாசுதேவ பெருமாள் கோவில் இடத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


அடையாறு மண்டலம், 178வது வார்டு வேளச்சேரியில் வாசுதேவ பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியில், 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் என தெரிய வந்துள்ளது. முன்பு, 10 ஆயிரம் சதுர அடி பரப்புக்கு மேல் இருந்துள்ளது; தற்போது 2,000 சதுர அடி பரப்பில் உள்ளது. இதில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது.அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், 20 ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தை முறித்து, சிலையை வெளியே வீசி, கட்டடத்தை இடித்து ஆக்கிரமிக்க முயன்றபோது, அங்குள்ள பெருமாள் பக்தர்கள் எதிர்த்தனர். இதை தொடர்ந்து, அவர்கள் ஒன்று சேர்ந்து, 'வாசுதேவ பெருமாள்' என்ற அறக்கட்டளையை துவக்கி, கோவிலை ஆக்கிரமிக்காத வகையில் பாதுகாத்து வருகின்றனர். கோவிலில் உள்ள பெருமாள் சிலைக்கு பூஜை நடத்துகின்றனர். இந்த கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க முயன்றபோது, அரசியல் கட்சிகள் சேர்ந்து தடுத்துள்ளன.


இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அமைச்சர்சேகர்பாபு, இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது சுற்றி புதராகக் கிடந்தது. அதை மாநகராட்சி சுத்தம் செய்தது. 'இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் கூறினார்.


இந்நிலையில், கோவில் பின்பகுதியில் கூடாரம் அமைத்து, வயதான நபரை தங்க வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாகக் கூறி, கோவில் இடத்தை ஆக்கிரமிக்க மீண்டும் முயற்சி நடக்கிறது. அமைச்சர் தலையிட்டு, இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.




இது குறித்து வாசுதேவ பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது: அமைச்சர் ஆய்வு செய்து, ஹிந்து சமய அறநிலையத்துறை வசம் சேர்க்கப்படும் என கூறினார். அதன் பின், இடத்தை ஆக்கிரமிக்க கட்சியினர் தீவிரமாக இறங்கினர். ஆக்கிரமிப்பு தொடர்பாக அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றோம்; நடவடிக்கை தான் இல்லை. கோவிலை மீட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தண்டீஸ்வரம் கோவில் வசம் ஒப்படைக்க, அமைச்சர்நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • RandharGuy - Kolkatta,இந்தியா

    கோயில் கட்டறுத்துக்கு வாங்கின நிலத்தலுய் கொள்ளை அடிச்ச கும்பல் திமுகவையும் அதிமுகவையும் சொல்றது இவங்களுக்கே கய் வந்த கலை

  • தத்வமசி - சென்னை ,இந்தியா

    கோவில் இடத்தை ஆக்கிரமித்தவர் இந்துவாகவோ அல்லது கட்சி சார்பில்லாதவரகவோ இருந்தால் உடனடியாக மீட்கப்படும். வருமானம் உள்ள கோவிலாக இருந்தால் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அரமில்லாத்துறை வந்து அமர்ந்து கொள்ளும். வீணாகப் போகும் வரை சுரண்டி சுரண்டி அதிலிருந்து காசு பார்க்கும். பணம் ஏதும் இல்லை என்றால் அப்படியே விட்டு விட்டு ஓடி விடும்.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    நீங்கள் எல்லாம் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? திமுக ஆட்கள் ஆக்கிரமிப்பு செய்தால், அதெல்லாம் ஆக்கிரமிப்பு கிடையாது, அது திமுகவினர் இடம். இந்த சட்டம் உங்களுக்கு தெரியாது போலிருக்கிறதே. நீங்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தானா?

  • Malarvizhi - Hyderabad,இந்தியா

    இது போன்று பல கோயில்கள் உள்ளன. அவை மீட்கப்பட வேண்டும். அவரவர் ஊர் கோயிலில் பூசைகள், திருவிழாக்கள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்று அந்த அந்த ஊர்க்காரர்கள் கவனித்தால் இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    அந்த ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அநேகமாக திமுக மற்றும் அதிமுக 'கழக கண்மணிகள்தான்' இருக்கும். அடித்து துரத்துங்கள் அவர்களை.

Advertisement