dinamalar telegram
Advertisement

துணைத் தலைவர் பதவிக்கு பணம் ரூ.1 லட்சத்தை வீசியெறிந்த பெண்

Share
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக வாங்கிய 1 லட்சம் ரூபாயை போட்டியாளர் வீட்டின் முன் பெண் உறுப்பினர் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நன்னாவரம் ஊராட்சித் தலைவராக கலியமூர்த்தி வெற்றி பெற்றார். நாளை 20ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டி நிலவுகிறது.இதில், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்ற சந்திரபாபு - ஆறுமுகம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக இரு தரப்பினரும் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சந்திரபாபு ஆதரவாளர்கள், துணைத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கக் கோரி ஆறுமுகத்தை மிரட்டியதாக தெரிகிறது.இது ஆறுமுகத்தின் ஆதரவாளரான வார்டு உறுப்பினர் அனுஷியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் சந்திரபாபுவிடம் பெற்ற 1 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க அவரது வீட்டிற்கு நேற்று காலை 10:00 மணியளவில் அனுஷியா சென்றார்.


அங்கு, சந்திரபாபு பணத்தை திருப்பி வாங்க மறுத்து தனக்கு ஆதரவளிக்குமாறு கூறினார். ஆனால் அனுஷியா ஆதரவளிக்க மாட்டேன் எனக்கூறி 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 1 லட்சம் ரூபாயை சந்திரபாபு வீட்டின் முன் வீசி விட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (40)

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    பண நாயகம் ஜொலிக்கிறது , வருமான வரி துறை நடவடிக்கை எடுக்கட்டும்.

  • Veluvenkatesh - Coimbatore,இந்தியா

    ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்ற வார்டு மெம்பருக்கு ஒரு லட்சம் லஞ்சம், அடஎங்கப்பா என்னே நம்ம காந்தி கண்ட கிராம ராஜ்யம்? அப்போ...மக்களே நல்லா பாருங்க இந்த ஒன்றிய தலைவரு, மாவட்ட தலைவரு, நகர் மன்ற தலைவரு அப்புறம் மேயர் பதவிக்கு பணம் எப்படி விளையாடும்" டாஸ்மாக் நாடுன்னா சும்மாவா?

  • தமிழ் நாட்டு அறிவாளி - Chennai,இந்தியா

    ஒரு கேஸ போட்டு வாழ்நாள் பூரா கோர்ட்டுக்கு அலையவிடலாம்

  • RandharGuy - Kolkatta,இந்தியா

    லக்னோ: போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், தற்போதைய பா.ஜ., எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரிவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  • S. Narayanan - Chennai,இந்தியா

    எலக்சன் நடத்தி அதன் பிறகு இப்படி பேரம் பேசுவதை விட எலக்சன் இல்லாமல் ஏள முறையில் ஒவ்வொரு பதவிக்கும் யார் அதிக பணம் காட்டுகிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு அந்த பதவியை வழங்கி விடலாம். ஏல தொகையை அரசு நடத்த எடுத்து கொள்ளலாம். எலக்சன் செலவு மிச்சம் ஆகும்.

Advertisement