dinamalar telegram
Advertisement

பா.ஜ., சார்பில் போட்டியிட்ட 381 பேர் வெற்றி: அண்ணாமலை

Share
சென்னை : ''ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில், நேற்று அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின், அண்ணாமலை அளித்த பேட்டி: பா.ஜ., பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமனை, எந்த அறிவிப்பும் இல்லாமல் போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கைது குறித்து கேட்க சென்ற, மகளிரணி நிர்வாகியையும், அவமரியாதையாக நடத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்படும்.
ஆளும்கட்சியின் ஏவல் படையாக, காவல் துறை செயல்படக் கூடாது; தமிழகத்தில் சர்வாதிகாரம் தலைதுாக்கி இருப்பதற்கு, இதுவே உதாரணம்.பா.ஜ., மீதும், பிரதமர் மீதும் கடும் விமர்சனங்கள் செய்வோருக்கு எதிராக, காவல் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. காலங்கள் மாறும், காட்சிகள் மாறும். எனவே, கட்சிகளை தாண்டி, காவல் துறை நியாயமான முறையில் நடக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர்களில், 332 வார்டு உறுப்பினர்கள்; 41 பஞ்சாயத்து தலைவர்கள்; எட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம், 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நெருக்கடி நிலை என்று கூறி, ஒரு யூனிட் மின்சாரத்தை, 20 ரூபாய்க்கு வாங்குகின்றனர். இது, உற்பத்தி செலவை விட, நான்கு மடங்கு அதிகம். ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் உற்பத்தி நிலையத்தை வாங்கி, அதன் வாயிலாக, 5,000 கோடி ரூபாய்க்கு மின்சாரம் விற்க வாரியத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார்.

அமைச்சர்களுக்கு லாபத்தை ஈட்டுவதற்காக தான், இந்த ஒப்பந்தம் நடக்கிறது. ஏற்கனவே மின் வாரியம், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதை நிறுத்தாவிட்டால், ஒப்பந்த பேச்சு குறித்த ஆவணங்களை, பா.ஜ., வெளியிடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (72)

 • rajan - erode,இந்தியா

  ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். - ஒரு வோட்டு காரரும் பிஜேபி சார்பில் போட்டியிட்டவரே என அண்ணாமலை தெரிவித்தார்

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  நீ தலைவனாகிட்ட இல்ல...? அந்த 381 ம் எப்படி 0 ஆக்குகிறது என்று தமிழகம் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை ஆர்வக்கோளாறு ஆபீசர்...

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  நண்பர் நாராயணன் முத்துவின் கலாய்ப்பு தான் உண்மை.. காஸ்மீரிலே போலீஸ் சுட்டவன் எல்லாம் தீவிரவாதி என்பது போல, தமிழ்நாட்டிலே ஜெயிச்ச சுயேட்சைகள் எல்லாம் பாஜகவினர். ஒத்த வோட்டு புகழ், மற்றும் இவரு கட்சியிலே மண்ணைக்கவ்வி தோத்தவன் எல்லாம் சுயேட்சைகள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  சொல்லவே இல்லே ..

 • S.Aruna - Trichy,இந்தியா

  இந்த 381 பெயரும் ஓட்டு கேட்கும்போது தான் பிஜேபி வேட்பாளர் எனக்கூறி ஓட்டுக் கேட்டார்களா?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   பாஜாக்கான்னு வோட்டு கேட்டிருந்தா ஓட ஓட வெரட்டியடிச்சிருப்பானுங்க..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   அப்படி அண்ணாமலே, மோடிஜி படத்தை எல்லாம் போட்டு வோட்டு கேட்டவன் கதி என்னாச்சி ஒத்தை வோட்டு புகழ் டிரெண்டிங் ஆச்சி.. போங்க அண்ணாமலே..

Advertisement