dinamalar telegram
Advertisement

பருவமழை துவங்கும் முன்பே நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு.. போர்வெல்லை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி

Share
Tamil News
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பருவமழை துவங்கும் முன்பே தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனால் போர்வெல்லை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டு தோறும் பருவமழை சரி வர பெய்யாததால் குறையும் நிலத்தடி நீர் மட்டம் மீண்டும் உயருவதில்லை. இதனால் இயற்கையில் கிடைக்கும் மழைநீரை சேமிக்க வேண்டியதாயிற்று. அத்துடன் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு கடலில் வடிந்து வீணாவதை தடுக்க ஆங்காங்கே தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி வைக்கப்படுகிறது.

இதனால் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.தமிழகத்தில் பருவ மழை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவடையும். தென் மேற்கு பருவமழை முடிந்தாலும் புயல் சின்னம் காரணமாக தொடர்ந்து மழை பெய்துள்ளது. இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் பருவம் தவறி மழை பெய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர். தென் மேற்கு பருவ காற்றின் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய மழையளவும் இயல்பைவிட கூடுதலாகவே கிடைத்துள்ளது.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய 383.10 மி.மீ., மழைக்கு 443.58 மி.மீ., மழை கூடுலாக பெய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவான 220.2 மி.மீட்டருக்கு இது வரை 160 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலோரப்பகுதியல்லாது, வறட்சியாக இருக்கும் பகுதிகளான திட்டக்குடி, வேப்பூர் போன்ற பகுதிகளிலும் அதிகளவில் மழை பெய்துள்ளது. இதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

மாநில நிலம் மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் நடத்திய ஆய்வில், கடலுார் மாவட்டத்தில் கடந்த 2020 ம் ஆண்டில் 6.54 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் (2021) இந்த ஆண்டு 5.99 மீட்டராக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.55 மீட்டர் உயர்ந்துள்ளது. இதனால் கடலுார் மாவட்ட விவசாயிகள் வெகுவாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலுார் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பெய்த மழை காரணமாக, மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    உடனே பம்பு வெச்சு அடிச்சு தண்ணீரை வெளியே எடுத்திருங்க. ஒரு சொட்டு நீர் பூமிக்கு உள்ளே இருக்கப்படாது.

Advertisement