dinamalar telegram
Advertisement

தலை கவசம், முக கவசம் அவசியம் உதவி கமிஷனர் அறிவுறுத்தல்

Share
Tamil News
மணலிபுதுநகர் : “இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது, தலை கவசம் மற்றும் முக கவசம் ஆகிய இரண்டுமே அவசியம்,” என, உதவி கமிஷனர் மலைச்சாமி கூறினார்.

சென்னை மணலிபுதுநகர், ஆண்டார்குப்பம் சந்திப்பில், மணலி போக்கு வரத்து காவல் துறை சார்பில், தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது.இதில், போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி, மணலி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர் அழகேசன் உள்ளிட்டோர் பங்கேற்று, இரு சக்கர வாகனத்தில் பயணித்தோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியின் போது, இருசக்கர வாகனத்தில், தலை கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி, சமூக ஆர்வலர் ஜெகன் வழங்கிய 50 தலைகவசங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் மலைச்சாமி பேசியதாவது:இரு சக்கர வாகன ஓட்டிகள், தலையில் காயம் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, தலை கவசம் அணிவது போல், கொரோனா தொற்றை தடுக்க, நிச்சயம் முக கவசம் அணிந்தாக வேண்டும்.போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் காவலர்கள், 100 சதவீதம் முக கவசம் அணிந்துள்ளனர்.ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் போது, மற்றவர்களும் பாதிக்கக்கூடாது என்பதற்காக, வாகன ஓட்டிகள் நிச்சயம் இம்முறையை கடைப்பிடித்தாக வேண்டும்.

போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, கன்டெய்னர் லாரிகள் தனியாக வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்ற வாகன ஓட்டிகள் சிரமமின்றி சாலையில் பயணிக்கலாம். இருப்பினும், நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement