dinamalar telegram
Advertisement

கொடிக்கம்பங்களை அகற்ற என்ன தயக்கம்? ஊருக்கு நல்லது செய்யுங்கள்! சாலை பணி தாமதம்; கட்சிகளுக்கு நோட்டீஸ்

Share
Tamil News
திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரோடு போடும் பணிக்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். அரசியல் கட்சியினருக்கு இதுதொடர்பாக 'நோட்டீஸ்' வழங்கப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சியில் பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் நகரில் உள்ள அகலமான ரோடுகள் ஸ்மார்ட் ரோடாக மாற்றும் பணி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இதில் ராயபுரம் பகுதியில் ரேஷன் கடை முதல் ரவுண்டானா வழியாக நஞ்சப்பா பள்ளி ரோடு வரை 800 மீட்டர் நீளமுள்ள ரோடு ஸ்மார்ட் ரோடாக அமைக்கும் பணி திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.இதில் தற்போது ராயபுரம் ரவுண்டானா பார்க் பகுதி வரை ரோடு அமைக்கும் பணி துவங்கியது. ரோட்டின் இருபுறமும் மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. தற்போது ரோடு போடும் பணி பார்க் அருகே நீண்ட நாளாக தாமதமாகி வருகிறது.
அப்பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிக் கொடிகளை மேடை கட்டி அமைத்துள்ளனர். இந்த கொடிக்கம்பங்கள் இடித்து அகற்றினால் மட்டுமே தொடர்ந்து ரோடு போட முடியும். கட்சிக் கொடிகள் அகற்றப்படாமல் பணி தாமதமாகிறது.கொடிக்கம்பங்களை அகற்ற, அரசியல் கட்சியினர் முன்வராத நிலையில், எழுத்துபூர்வமாக நோட்டீஸ் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. (தி.மு.க.,(மேடை மட்டும் உள்ளது) - அ.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சியினரின் கொடிக்கம்பங்கள் உள்ளன.
மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில், ''இங்கு கொடி அமைத்துள்ள அரசியல் கட்சி கிளை நிர்வாகிகளுக்கு இது குறித்து எழுத்து பூர்வமாக நோட்டீஸ் இன்று (நேற்று) தயார் செய்து வழங்கப்படவுள்ளது.உரிய கால அவகாசம் வழங்கி, கட்சியினரே அப்புறப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொடிக் கம்பங்கள் அகற்றிய பின் தொடர்ந்து பணி மேற்கொள்ளப்படும்'' என்றனர்.''ஊருக்கு நல்லது செய்வதாக மேடைக்கு மேடை முழங்கும் அரசியல் கட்சியினர், உடனடியாக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்; இப்பகுதி மட்டுமின்றி, சாலைகளில் எங்கெல்லாம் கட்சிக்கொடிக்கம்பங்கள் இடையூறாக உள்ளதோ, அவற்றையெல்லாம் அகற்ற, கட்சியினர் முன்வரவேண்டும்'' என்கின்றனர் பொதுமக்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement