புதுடில்லி: :ஜம்மு - காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக குறிவைத்து கொல்லப்படுவதை விசாரிக்க சென்று, சமீபத்தில் டில்லி திரும்பிய சிறப்பு புலனாய்வு படையினரை, மீண்டும் காஷ்மீர் சென்று விசாரணையை தொடரும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காங்., எம்.பி., ராகுல், டில்லியில் இன்று (அக்.18) நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜினி படீல், மாநில தலைவர் குலாம் அகமது மிர் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர் தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் காங்., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மோடி அரசு முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. போதிய நிர்வாக திறமை இல்லாத காரணத்தால், பயங்கரவாதிகளின் தாயகமாக ஜம்மு - காஷ்மீர் மாறும் நிலை உருவாகி உள்ளது.அங்கு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் தான் இது நாள் வரை மோதல்கள் நடந்து வந்தன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பலவீனமான நிர்வாகத்தால், சாதாரண மக்கள் மீதும் தாக்குதல்கள் துவங்கியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குலாம் நபி ஆஜாத் என்ன சொல்கிறார்? பழைய முதன் மந்திரிகள் பாகிஸ்தானுடன் பேசிச்சுவார்தை வேண்டும் என்கின்றனர். என்ன பேசுவது? முட்டாள்கள்.