dinamalar telegram
Advertisement

நூறு நாட்களில் நூறு புத்தக விமர்சனம்

Share

விமல் தியாகராசன்
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர்,பல்வேறு உயர்நிறுவனங்களில் பணிபுரிந்தவர் தற்போது ‛பி பாசிடிவ் ட்ரெயினிங் அகாடமி' என்ற சொந்த பயிற்சி நிறுவனம் மூலமாக கல்லுாரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு விதமான ஆளுமை பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
தமிழ் ஆங்கிலம் இந்தி மொழி வழியாக இவர் நடத்தும் பயிற்சி வகுப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் வரை பயிற்சி பெற்றுள்ளனர்.தற்போது ஆன் லைன் மூலமாக 21 மணி நேரத்தில் இந்தி கற்கலாம் என்பது போன்ற வித்தியாசமான வகுப்புகளை நடத்துகிறார்.

இது போன்ற வகுப்புகளுக்கு தேவையான பாடக்குறிப்புகளுக்காக நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் இன்றைய தலைமுறைக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில்‛ லீட் டூ ரீட் ' ஒரு புதுமை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார்.
அதன்படி உலகில் உள்ள பிரபலமான தன்னம்பிக்கை தரும் நுாறு ஆங்கில புத்தகங்களை படித்து அதன் சாரத்தை எட்டில் இருந்து பத்து நிமிடத்திற்குள் வீடியோ மூலமாக தமிழில் அறிமுகம் செய்து வருகிறார்.
புத்தகத்தை படிக்கும் போதே தேவையான குறிப்பு எடுத்துக் கொண்டு அந்த குறிப்புகளின் அடிப்படையில் புத்தகத்தின் சாறு பிழிந்து சுவராசியமாக கொடுக்கிறார்.
உண்மையில் இது மிகவும் சிரமமான காரியம் அந்த எட்டு நிமிட வீடியோவிற்காக ஒரு நாளைக்கு சுமார் 19 மணி நேரம் வேலை பார்க்கிறேன் என்கிறார்.
நுாறு நாளகை்கு நுாறு வீடியோ என்ற தலைப்பில் இதுவரை 77 புத்தகங்களை படித்து வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

ரத்த பூமி,ஒரு புறாவிற்காக போரா? நிர்வாக மேலாண்மை,நிதி நிர்வாகம்,திருமணத்திற்கு பின் காதல் கசக்கிறதா?பார்க்கும் வேலை போராடிக்கிறதா?என்று பல்வேறு துலைப்பில் இவர் போடும் வீடியோ இப்போது மக்களிடம் மிகவும் பிரபலம்.
எட்டில் இருந்து பத்து நிமிட வீடியோவை மூன்று பகுதிகளாக பிரித்து உள்ளார் ஒரு பகுதி புத்தகம் எழுதிய ஆசிரியர் பற்றியது இது புத்தகம் வாங்கி படிக்க விரும்புபவர்களுக்கு உதவும் அடுத்து புத்தகம் சொல்லும் கருத்தை இவர் சுவராசியமாக சொல்வது மூன்றாவது ஒரு புதிரோடு முடிக்கிறார் புதிர் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது.

தனது இந்த முயற்சிக்கு மனைவி சிவரஞ்சனி பெரிதும் உதவியாக இருப்பதாக கூறும் விமல் தியாகராசனின் வீடியோவைக் காண https://youtube.com/c/BePositiveTamil என்ற யூட்யூப் மூலமாக பார்க்கலாம்.இவருடன் பேசுவதற்காக எண்:98409 36201.
-எல்.முருகராஜ்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement