dinamalar telegram
Advertisement

மோடி அரசு நியமித்த குண்டர்கள்போல நடந்துகொள்ளும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: சஞ்ஜய் ராவத்

Share
மும்பை: சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தொடர்ந்து மத்திய பாஜ., அரசை விமர்சித்து வருகிறார். தற்போது மத்திய புலனாய்வு அமைப்புகளை விமர்சித்துள்ள அவர், இந்த அமைப்புகள் மத்திய அரசின் அடியாட்கள்போல நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள மத்திய அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை அடியாட்கள்போல பயன்படுத்தி வருவதாக சஞ்சய் ராவத் பத்திரிகையாளர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளை திட்டமிட்டு ஆட்களை கொலை செய்யும் கூலி அடியாட்கள்போல மோடி அரசு பயன்படுத்தி வருவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் திடீரென வருமான வரி சோதனை நடத்த ஏதேனும் சட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத் வருமான வரித்துறை மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவு சோதனை இட்ட நிலையில் இதனை சாதனை புத்தகத்தில் பதிவிடலாம் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சஞ்சய் ராவத் கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. மூலதனம் இல்லாத ஓர் சிறந்த தொழிலாக தற்போது வருமான வரித்துறை சோதனை திகழ்ந்து கொண்டிருக்கிறது எனக் கூறிய அவர், மக்களின் பணத்தைக் கொண்டு அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய பாஜ., அரசு வருமான வரி சோதனை ஆயுதமாக கையில் எடுக்கிறது என்றுள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் மாநில அமைச்சர் நவாப் மாலிக் மருமகன் சமீர் கான் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சமீர் கானிடம் போதைப்பொருள் கைப்பற்றப்படாத சூழலில் என்சிபி அவரை கைது செய்துள்ளது.


சமீர் கான் என்சிபி அதிகாரிகள்மீது இதற்காக வழக்கு தொடர வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டில் முன்னதாக சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்தும் அவர் விமர்சித்தார்.

இதேபோல அஜித் பவார் வீட்டிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நிதி கணக்கில் செலுத்தப்படும் நிதி விவரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால் மத்திய அரசு இதுபோல ரெய்டு நடத்தி அச்சுறுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • அருணா -

  தன்போல் பிறரை நினைப்பதுமுற்றிலும் தவறு

 • Indhuindian - Chennai,இந்தியா

  குண்டர்கள்ன்னு மத்தவங்களை பத்தி சிவ சேனா பேசறது கொஞ்சம் ஓவரா தெரியலே நீங்க கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பி பாருங்களேன்

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  கிரிமினல்களுக்கு பயம் வருவது நியாயம்தானே. பிஜேபி கூட்டணியில் வென்று துரோகம் செய்து மாற்று கட்சியினருடன் சேர்ந்து ஆட்சி அமைத்த தூரோகிகளுக்கு அப்படித்தான் தெரியும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திமிர் பேச்சுப்பேசுவது இவர்களுக்கு புதிது அல்ல...

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  கான் கிராசு கட்சிக்கும் தேசிய வாத கட்சிக்கும் வக்காலத்து வாங்கிப்பேசும் சஞ்சய் ராவுத், முதலில் உங்கள் கட்சியில் எத்தனை உத்தமர்கள் உள்ளார்கள் என்று சொல்லும். தேர்தலுக்குப்பின் கட்சிமாறிய - தத்தளிக்கும் தறிதலைக்கெல்லாம் இப்போது வாய் கிழிகிறது. பதவி மோகத்தில் திகழும் உங்களை என்ன வென்று சொல்லலாம்? அப்பழுக்கில்லாத பிரதமரை வாய்க்குவந்தஇதெல்லாம் பேசுவது சரியல்ல. முதலில் மஹாராஷ்டிராவிற்கு வளர்ச்சிப்பணிகளை துவக்குங்கள். போதைப்பொருளில் மகாராஷ்டிரம் நாட்டிலேயே முதல்மாகாணமாக் திகழ்கிறது. அரசும் அதற்க்கு உடந்தையாக ஒத்து போகிறது. இதை மத்கிய அரசு என்ன வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்குமா? நாட்டின் நலம்பற்றி உங்களுக்கென்ன கவலை? நீங்கள் முதலில் வீட்டின் நலத்திலாயே உங்களால் கண்காணிக்க முடியவில்லை.

Advertisement