dinamalar telegram
Advertisement

காஷ்மீரில் தொடரும் துப்பாக்கி சூடு; 2 தொழிலாளர்கள் படுகொலை

Share
ஜம்மு: காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் இரு தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. இம்மாத துவக்கத்தில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈத்கா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பீகாரை சேர்ந்த பானிப்பூரி விற்பனை செய்யும் அரவிந்த் குமார் ஷா என்பவர் கொல்லப்பட்டார்.
இதேபோல உத்தர பிரதேசத்தை சேர்ந்த புல்வாமாவில் சாகிர் அகமது என்ற நபரும் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் காஷ்மீர் மண்டல போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், இன்று காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ நகரில், காஷ்மீரை சேராத தொழிலாளர்கள் சிலர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், பீகாரை சேர்ந்த ராஜா ரேஷி தேவ்,ஜோகிந்தர் ரேஷி தேவ் என இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சன்சன் ரேஷி தேவ் என்ற மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார். இவரும் பீகாரை சேர்ந்தவர்தான். காஷ்மீரில் தொடர்ந்து நடந்துவரும் துப்பாக்கிச்சூட்டால் மக்கள் மத்தியில் பீதியில் உறைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    Search every home in kasmir, shoot if you find anyone with weapon

Advertisement