dinamalar telegram
Advertisement

கேரளாவிற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்: அமித்ஷா

Share
புதுடில்லி: ‛‛மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்,'' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கேரளாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே கேரளா விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதிருக்க கேரள அரசு அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • கௌடில்யன் - Chennai ,இந்தியா

  கேரளாவில் பெரும்பாலானவர்கள் திரை கடல் ஓடியும் திரவியம் தேடியவர்கள் ..ஒவ்வொரு வீட்டை பார்த்தாலே கோடிகளில் இழைத்து வைத்திருப்பார்கள் ...கலியாணங்களில் கிலோ கணக்கில் தங்கம் ...ஹவுசிங் லோன் வாங்கும்போதே இயற்க்கையால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ..மகாராஷ்டிராவில் மழை அதிகம் பெய்தால் விவசாயிகளுக்கு இழப்பீடு ..மழை பெய்யாவிட்டால் இழப்பீடு ...உத்திரகாண்ட இமாச்சலில் மலை சரிவு ,,அசாம் பெங்கால் பீகாரில் மழை வெள்ளம் ...தமிழ்நாட்டிலோ இலவச அரிசி ..இலவச மின்சாரம் ..தாலிக்கு தங்கம் ..எல்லாத்துக்கும் இழப்பீடு கொடுத்துகிட்டே வந்தா யார் கட்டிய வரியில் இழப்பீடு தருவது ...

 • Nepolian S -

  உதவி இல்லை அது உங்களின் வேலை

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  ஆமா நீங்கதான் செய்யணும் வரி மட்டும் வாங்குறீங்கல்ல? கேரளா இந்தியாலதானே இருக்கு. இல்லன்னு சொல்லிட்டா அவங்க பாத்துப்பாங்க...

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  அது என்ன கேரளாவிற்கு உதவி செய்ய தயார்? குஜராத் என்றால் உடனே பாதிக்கபபட்டவர்களுக்கு இரண்டு இலட்சம் அறிவிப்பது. கேரளாவும் இந்தியாவில் தானே இருக்கிறது? அதற்கும் நீங்கள் தானே பொறுப்பு, நீங்கள் செய்யவேண்டியது உதவியை அல்ல, கடமையை ...

 • கோட்டய சேட்டன் -

  செய்யத்தயார்னு என்ன ஒரு ஸ்டேட்மெண்ட்டு... அங்கே மாநிலமே வெள்ளக்காடா இருக்கு. இந்நேரம் உதவிகள் செஞ்சிருக்க வாணாமா? ஜி.எஸ்.டி மட்டும் சொல்லாமலேயே கலெக்ட் பண்ணிருவாங்க.

Advertisement