dinamalar telegram
Advertisement

7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Share
சென்னை: நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெறியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக




இன்று 17ம் தேதி: நீலகிரி, திண்டுக்ல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருப்பூர், திருப்பத்துார், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 18 ம் தேதி: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்., 19ம் தேதி: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.,20ம் தேதி: டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அக்.,21ம் தேதி: டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:



அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:



பாபநாசம் (திருநெல்வேலி) 27 செ.மீ., பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 22 செ.மீ., சித்தார் (கன்னியாகுமரி) 20 செ.மீ., பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 11 செ.மீ., மணிமுத்தாறு (திருநெல்வேலி), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 10 செ.மீ., மேட்டூர் (சேலம்), சின்னக்கல்லார், வால்பாறை (கோவை) தலா 9 செ.மீ., சோலையார் (கோவை), 8 செ.மீ., மயிலாடி (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), வால்பாறை தாலுக்கா அலுவலகம், (கோவை), வால்பாறை (கோவை), தலா 7 செ.மீ., ஆய்குடி, தென்காசி தலா 6 செ.மீ., நாகர்கோவில், கொட்டாரம், (கன்னியாகுமரி), துறையூர் (திருச்சி), செங்கோட்டா (தென்காசி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கோவை அவுஸ் (கோவை) தலா 5 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:



இன்று 17ம் தேதி: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:



இன்று 17ம் தேதி: தென் கேரள கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement