dinamalar telegram
Advertisement

அரசு பணியில் இருந்து பிரிவினைவாத தலைவரின் பேரன் டிஸ்மிஸ்

Share
ஸ்ரீநகர்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் பேரன் அனீஸ் உல் இஸ்லாம் அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

அவர் காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்கு மையம் (எஸ்.கே.ஐ.சி.சி.,) செயல்படுகிறது. இந்த மையமானது, ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் முக்கியமான கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தும் உயர்மட்ட அமைப்பாகும். இந்த அமைப்புதான், வி.வி.ஐ.பி.,க்களுடன் கருத்தரங்கம் மற்றும் உயர் மட்ட கூட்டங்களை நடத்துகிறது. இந்த மையத்தில், ஆராய்ச்சி பிரிவு அதிகாரியாக, கிலானியின் பேரனான அனீஸ் உல் இஸ்லாமை, கடந்த 2016ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த மெகபூபா முப்தி நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், அரசு பணியில் நியமனம் செய்யப்படும் சில மாதங்களுக்கு முன்னர் அனீஸ், பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவரை நியமிக்க வேண்டும் என அரசின் மேல்மட்டத்தில் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பணி நியமன விதிமுறைகள் மீறப்பட்டன. ஸ்ரீநகரில் நடக்கும் போராட்டங்களை டுரோன் மூலம் படம் பிடிக்க சிலருக்கு அவர் உதவியும் செய்துள்ளதாக தெரிகிறது. அதன் மூலம் போராட்டங்கள் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு சென்றுள்ளது.
அவரது நியமனத்தில் கடுமையான முறையில் முறைகேடு நடந்துள்ளது. பயங்கரவாதி புர்ஹான்வானி கொல்லப்பட்ட பின்னர் அங்கு ஏற்பட்ட வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அனீசுக்கு கெசட்டட் பிரிவுக்கு இணையான பதவி வழங்குவது என கிலானிக்கும், முப்திக்கும் ஒப்பந்தம் போடப்பட்டதாக சந்தேகம் உள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் காலியாக இருந்த அந்த பதவியை நிரப்புவதற்கு எந்த அவசரமும் இல்லை. ஆனால், அனீஸ் பாகிஸ்தான் சென்று வந்த பின்னர், எஸ்.கே.ஐ.சி.சி.,யில் காலி பணியிடம் உள்ளதா? என திடீரென அதிகாரிகள் அவசர கதியில் ஆய்வு செய்தனர். அவசர கதியில், அவருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் குறித்த சான்றிதழும் வழங்கப்பட்டது. அவர் சந்தேகத்திற்கு உரிய வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, நாடுகளை சேர்ந்த 3 பேருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

 • RajanRajan - kerala,இந்தியா

  அரசு பணியில் இருந்து பிரிவினைவாத தலைவரின்) பேரன் ( தீவிரவாதிக்கு உதவிய ) டிஸ்மிஸ். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த இவனுக்கு டிஸ்மிஸ் பத்தாது என்கவுன்டர் பண்ணி செய்தி வந்திருக்க வேண்டும். முப்தி குடும்பம் தான் வி.பி.சிங் காலத்திலே கஸ்மீரி பண்டிட்களை துவம்சம் செய்தது. இதில் அந்த ஆஸாத்துக்கும் பங்கு உண்டு. எனவே மத்திய அரசு மூர்கனை அடையாளம் கண்டு சத்தமில்லாம தீவிரவாதீங்க யுக்தியிலேயே என்கவுன்டர் பண்ணணும் விட்டுவைக்காதீர்கள். ஜெய் ஹிந்த்

 • SUBBU - MADURAI,இந்தியா

  இந்தியாவில் உள்ள எந்த ஒரு மூர்க்கனும் மனதால் தான் ஒரு இந்தியன் என நினைக்கவே மாட்டான். அதே போல் நாமும் அவன்களை இந்தியன் என கருதாமல் அவன்களின் கடைகளில் ஹோட்டல்களில் எந்த பொருளையும் வாங்க கூடாது.

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  சிறுபான்மை உரிமை பறிப்பு................மோடி ஒழிக...............அப்பாடா, இன்னைக்கு இருநூறு ரூவாய் செத்தது........

 • ramesh - kanchipuram,ஓமன்

  தலைப்பை மாற்றவும் ......இவர்களுக்கு கொஞ்சம் கூட அனுதாப பட கூடாது அரசு பணியில் இருந்து பிரிவினைவாத தலைவரின்) பேரன் ( தீவிரவாதிக்கு உதவிய ) டிஸ்மிஸ்

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  Abdulla,, pawar, mufti, momta இவனுங்க ஒத்துக்க மாட்டாங்க ஓகேவா?

Advertisement