dinamalar telegram
Advertisement

விண்வெளியில் படமாக்கப்பட்ட ரஷ்ய திரைப்படம் விரைவில் வெளியீடு..!

Share
மாஸ்கோ: விண்வெளி வீரர்கள் குறித்த 'தி சேலஞ்ச்' என்கிற ஆவணப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ரஷ்ய இயக்குனர் க்லிம் ஷிபெங்கோ தலைமையிலான குழுவினர் இந்த படப்பிடிப்பை நடத்த கடந்த 12 நாட்களாக விண்ணில் உள்ள ஐ.எஸ்.எஸ்., சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்றுள்ளனர்.
புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் ஓர் விண்வெளி வீரருக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் விண்வெளி செல்லும் ஓர் மருத்துவர் அதனை எவ்வாறு வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் என்பதே படத்தின் மையக்கரு ஆகும்.

இத்திரைப்படத்தில் இரு ரஷ்ய விண்வெளி வீரர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு கடும் போட்டியாக விளங்குவது ரஷ்யாதான். விண்வெளி சென்று திரும்பி வந்த முதல் ரஷ்ய நாய் லைகா.
முதல் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின். முதல் பெண் விண்வெளி வீராங்கனை வேலன்டினா. இதனையடுத்து தொடர்ந்து பரிசோதனை முயற்சியில் ஈடுபடும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம், வரும் டிசம்பர் மாதம் ஜப்பானிய செல்வந்தர் யுஸாகா மசாவாவை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்புகிறது.

அதே சமயத்தில் உலகத் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவு முதன்முறையாக விண்வெளியில் படமாக்கப்பட்ட இந்த ஆவணப் படத்தையும் தயாரித்து வெளியிட உள்ளது. இதேபோல ரஷ்யா தொடர்ந்து விண்வெளி பரிசோதனை முயற்சியில் முன்னோடியாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    முதன்முறையாக உண்மையாகவே விண்வெளியில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தைக் காண மிகவும் ஆவலக உள்ளோம். REAL SPACE MOVIE-யைக்காண WE ARE WAITING. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    சபாஷ் . ரஷ்ய நிபுணர்கள் தங்கள் தாய் மொழியிலேயே கற்றுத் தேர்ந்தவர்கள். நமது இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் தமிழ்ப் பயிற்சி மொழியிலேயே கற்றவர். தாய் மொழியில் கற்றோர் விண்ணையும் சாடுவர்.

    • Muruga Vel - Mumbai,இந்தியா

      சாடுவாரா ..என்ன கொடுமை சரவணா ..

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    அமெரிக்காவில் 2013 ம் ஆண்டு க்ராவிட்டி படம் வந்ததே ...

Advertisement