dinamalar telegram
Advertisement

சபரிமலை, மாளிகைப்புறம் மேல்சாந்தி குலுக்கல் முறையில் தேர்வு

Share
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்தி ஆகியோர் குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கி ஐயப்பனுக்கு பூஜை செய்வார்கள்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடந்தது. அக்., 21 ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

நாள்தோறும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். இன்று காலை 10:00 மணிக்கு புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது. நேர்முக தேர்வில் தேர்வான ஒன்பது பேரில் ஒருவர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார். இவர், வரும் கார்த்திகை முதல் தேதியிலிருந்து ஓர் ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வார். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று காலை முதல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சபரிமலையில் இன்று காலை நடைபெற்ற குலுக்கல் தேர்வில் சபரிமலை மேல்சாந்தியாக மாவேலிக்கரை என்.பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வானார். அதேபோல், மாளிகைப்புறம் மேல்சாந்தியாக கோழிக்கோடு சம்பு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓர் ஆண்டுகாலம் சபரி மலையில் தங்கி பூஜை செய்வார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Vittalanand -

    மெல் சாந்தி சாந்தி , நடு சாந்தி சாமி கோவிச்சிக்கும்

Advertisement