dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Share
சென்னை-'கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல் உட்பட 14 மாவட்டங்களில், இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசனின் அறிவிப்பு:மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது.தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கேரளா - லட்சத்தீவு கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கேரளா பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதனால், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், இன்று பலத்த காற்று மணிக்கு, 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் வீசும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று, 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசும். இப்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு, இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலுார், சேலம், ஈரோடு, பெரம்பலுார் ஆகிய, 14 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று கன மழை பெய்யும்.புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்று, நாளை, நாளை மறுநாள், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.சென்னையை பொறுத்தவரை, 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, தர்மபுரி மாவட்டத்தில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement