dinamalar telegram
Advertisement

தலிபான் தலைவர் பலி?

Share

காபூல்-தங்கள் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக, தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.தலிபான் அமைப்பை துவங்கிய முல்லா உமர் ௨௦௧௬ல் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து தலிபான் அமைப்பின் தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா பொறுப்பேற்றார். அவர் எப்படியிருப்பார், எங்கிருக்கிறார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

ஆப்கனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் ஹிபத்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இதை தலிபான்கள் மறுத்தனர்.இதற்கிடையே ஆப்கனை தலிபான்கள் கடந்த ஆகஸ்டில் மீண்டும் கைப்பற்றினர். இதையடுத்து, ஹிபத்துல்லா வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவரை பற்றி எந்த விபரமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர் அமித் ஷேக் நேற்று கூறுகையில், ''தலிபான் தலைவர் ஹிபத்துல்லா கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • duruvasar - indraprastham,இந்தியா

    நாதஸ் கூட நான் திருந்திட்டேனு அவரே சொன்னாரு. ஆனா வெத்தலை பாக்கு வாங்க போனபோது மறுபடியும் அவர் குணத்தை காட்டினாரு. தாலிபானை கும்புடுகிற தமிழ்நாட்டிலிருப்போரே இதை நம்பமாட்டார்கள். அப்ப இவ்வளவு நாள் சொன்னது பொய் தானே. இதை எந்த தாலிபான் பக்தனாவது ஒத்துப்பானா. இதெல்லாம் ஊரை ஏமாத்தற வேலை.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    வெகு விரைவில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு பலம் குன்றிவிடுவார்கள். மீதம் இருப்பவர்கள் ஐ எஸ் ஐ எஸ்ஸில் சேர்ந்து சிரியா அளவுக்கு ஆப்கானிஸ்த்தானை முன்னேற்றி விடுவார்கள்.

  • அப்புசாமி -

    படத்துல இருக்குற 11 பேரைப் பாத்தா பாவம இருக்கு. ஆளுக்கு ஒரு தற்கொலைப் படை வெச்சிருப்பாங்க. யார் யாரைப் போட்டுத் தள்ளப் போறாங்களோ...

  • அப்புசாமி -

    சபாஷ்... தற்கொலைப் படை தலிவருக்கே தற்கொலைப் படை ஆப்பு..... சூப்பர் மூர்க்கம்.

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டுமே அழிவின் விளிம்பில் இருக்கின்றன. அவர்கள் பின்பற்றும் "அமைதி மார்க்கமே" அவர்களுக்கு "மரண மார்க்கமாக " இருக்கிறது. உலகிலேயே மனிதர்கள் வாழத்தகுதியற்ற நாடு ஆப்கானிஸ்தான் தான் என்று பலரும் கருதுகின்றனர். இந்த இரு தேசங்களும் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளுவார்கள். இது உறுதி "பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலே சாவான்."

Advertisement