dinamalar telegram
Advertisement

இந்தியா-இலங்கை ராணுவம் கூட்டுப் பயிற்சி நிறைவு

Share
கொழும்பு-இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்தின் 12 நாள் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது.

இந்தியா, இலங்கை ராணுவத்தினர் இடையே எட்டாவது கூட்டுப் பயிற்சி இலங்கையில் நடந்தது. கடந்த 4ம் தேதி துவங்கிய இந்த 12 நாள் கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள, நம் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.இது குறித்து நம் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்த கூட்டுப் பயிற்சியில் நம் ராணுவத்தின் 120 வீரர்கள் பங்கேற்றனர். பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பான பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டனர்.இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தின் திறமை, வீரர்களின் திறன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இது பெரிதும் உதவும். மேலும் இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதாகவும் இந்த பயிற்சி அமைந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  இது தேவையற்றது. சீனாவுக்கு குடையுமாவான் வாலையை யும் பிடிக்கும் தமிழின துரோகி ராஜபக்த்தர் கும்பலைவிட்டு வேகு தூரம் விலகி யிருப்பதேயா மேல் . ராஜபக்தே ஐந்தாம் படையை வேலைய செய்வான். இம்ரான் கானை விட மோசம். இம்ரான்கான் நாடு என்றுமே நமக்கு விரோதப்போக்கு கொண்டுள்ள நாடு.ஆனால் இந்த சிறிய நாட்டுக்கு தலைவன் ஆகா இருந்து கொண்டு நம்மிடம் விரோதமாக ஆட்டிக்கொண்டிருக்கிறான்.துரோக புத்தி உடையவன்.அன்று நாம் அந்த விடுதலை புலிகள் விஷயத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் இன்று தனி ஈழம் உதயமாகி இருக்கும். நமக்கு அது கவசமாக இருந்திருக்கும். இந்த சிங்கள மூஞ்சிகளும் அடங்கி இருக்கும்.

 • Dharmakulasingham - Jaffna,இலங்கை

  நான் தினமலர் வாசகன்.தரமான பத்திரிகை.கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. ஆனால் நான் இலங்கை நாட்டவன்.என் நாடு எனக்கு எல்லாம்.உங்களிடம் தவறான கருத்து இருக்கிறது.நமது நாடு வல்லரசு இல்லை.நாம் எந்த நாட்டுக்கும் எதிர் இல்லை.சுய தேவைகள் தான் இரு பக்க உறவுகளை தீர்மானிக்கிறது.முன்னர் பாரதம் சோவியத் ரஷ்யா நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தது.இன்று அமெரிக்காவுடன் நெருங்கி உள்ளது,அது பாரதத்தின் தேவை.இலங்கையின் உறவு எந்த நாட்டுக்கும் தீங்கு விளைவிக்காது.

 • அப்புசாமி -

  சூப்பர் ஐடியா. இதைக் காமிச்சு சீனா கிட்டே பணம் வாங்கலாம். அப்புறம் சீன உதவியைக் காமிச்சு இந்தியா கிட்டே கடன் கேக்கலாம்.

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  இந்த விஷயம் சூசை கண்ணுல படவே இல்லையா ? அல்லது புதுசா கவர்னர் வந்ததுலேர்ந்து சூசை அடக்கி வாசிக்கிறாரா ? ஒண்ணுமே புரியல உலகத்துல

 • சம்பத் குமார் -

  1). இலங்கை உடன் நமது மத்திய அரசு நல்ல முன்னேற்ற பாதையில் செல்கிறது.2). இலங்கைக்கு இந்தியாவுடன் நட்புறவை காட்டி சீனாவிடம் மறைமுக எச்சரிக்கை செய்கிறது.3). அதேசமயம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கைக்கு அழைத்து இலங்கை வாழ் முஸ்லிம்களை குஷி படுத்தி பாகிஸ்தானையும் குஷி படுத்துகிறது.4). நமக்கு அண்டை நாடுகள் பாகிஸ்தான், சீனா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் மாலத்தீவு உள்ளன.5). இதில் பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் பங்களாதேஷ் போன்றவை நாம் தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். இவர்களை நம்ப முடியாது.6). சீனாவுடன் நாம் நில எல்லை மற்றும் கடல் எல்லை மற்றும் பொருளாதார ரீதியில் தினமும் கண்காணிக்க வேண்டும்.10). இந்த எல்லா நாடுகளை விட இலங்கை மிகவும் அபாயகரமானது. சந்தேகத்துடன் உடைய கண்காணிப்பை தொடர் வேண்டும். எல்லா mandatory கண்காணிப்பு தேவை. இலங்கை புத்த மட துறவிகள் அரசியல் செய்பவர்கள். நம் தமிழ்நாட்டுக்கு தொன்றுதொட்டு தலைவலி தந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. நன்றி ஐயா. ஹரி ஓம்.

Advertisement