dinamalar telegram
Advertisement

விண்வெளி ஆய்வு மையத்துடன் சீனா விண்கலம் இணைந்தது

Share
பீஜிங்-சீனா அனுப்பிய விண்கலம், விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. 'ஷென்சோ - 13' ஆனால் சீனா தனித்து 'டியான்ஹி' என்ற ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது.சீன விஞ்ஞானிகள், நேற்று, கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுயான் ஏவுதளத்தில் இருந்து, 'லாங் மார்ச் - 2எப்' என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தினர். இந்த ராக்கெட், வாங் யபிங், ஜிகங், யி குவாங்பு என்ற மூன்று விண்வெளி வீரர்களுடன் 'ஷென்சோ - 13' விண்கலத்தை சுமந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதில் வாங் யபிங், முதன் முதலாக சீன விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம், புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள டியான்ஹி விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது.ராக்கெட் புறப்பட்ட ஆறரை மணி நேரத்தில் இந்த இணைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வுக் கழகம் தெரிவித்து உள்ளது.ஆய்வுக் கூடம்விண்வெளி வீரர்கள் ஆறு மாதங்கள் விண்வெளி ஆய்வுக் கூடத்தில் தங்கி அதனை கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவர். சீனா ஏற்கனவே அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், மூன்று மாதங்கள் டியான்ஹி மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு கடந்த மாதம் பூமிக்குத் திரும்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Advertisement