dinamalar telegram
Advertisement

விபத்தில் உதவுவோருக்கு பரிசு மத்திய பிரதேசத்தில் அறிமுகம்

Share
போபால்-விபத்தில் சிக்கியோரை மீட்டு, உரிய மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் உதவுவோருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை, மத்திய பிரதேச அரசு அமல்படுத்திஉள்ளது.1.32 லட்சம் பேர்கடந்தாண்டு நாடு முழுதும் நடந்த 3.66 லட்சம் சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் இறந்து உள்ளனர். இவர்களில் பலர், 'கோல்டன் ஹவர்' எனப்படும், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்காததால் இறந்து உள்ளனர்.இந்நிலையில் 'சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்போருக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதோடு, சிறந்த காப்பாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் 10 சிறந்த காப்பாளர்களுக்கு மத்திய அரசின் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப் படும்.

இந்த திட்டத்தை, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசம் அமல்படுத்திஉள்ளது.எதிர்பார்க்கலாம்இது குறித்து, மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.,யான ஜனார்தன் கூறியுள்ளதாவது:விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தால், அவர்களை காப்பாற்ற முடியும். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் போன்ற சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால், விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுவதற்கு பலர் முன்வருவதில்லை.இந்நிலையில், விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுவோருக்கான மத்திய அரசின் பரிசு திட்டம், சாலை விபத்துகளில் உயிர் பலி ஏற்படுவதை வெகுவாக குறைக்கும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    விபத்தில் உதவுவோருக்கு பரிசு. சிறப்பு. இதேபோன்று, விபத்துக்களை ஏட்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனையும் அறிவிக்கவேண்டும். அதாவது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது, இப்படி செய்து விபத்தை ஏட்படுத்துபவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்கவேண்டும்.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    முதலில் தவறான திசையில் தவறான லேனில் பயணம் செய்வதை தடுக்க பாருங்க

  • vbs manian - hyderabad,இந்தியா

    பிரமாதம். யாருமே இதுவரை யோசிக்கவில்லை.

  • KG -

    good policy. but should be careful, they shouldnt accident and act like they help to admit. also sometimes multiple people help, now they shouldnt fight between them.thats the problem with seeing everything with Money..

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    தமிழகத்தில் அவர்களே விபத்தையும் ஏற்படுத்தி காயம் அடைந்தவர்களின் விரலில் இருக்கும் மோதிரத்தையும் பரிசாக எடுத்து சென்றுவிடுவார்கள்....

Advertisement