dinamalar telegram
Advertisement

கபடி ஆடுவதை படமெடுப்பதா? பா.ஜ., - எம்.பி., பிரக்யா சாபம்!

Share
போபால்-''நான் கபடி ஆடுவதை படம் எடுத்தவர் ஒரு ராவணன்: அவரின் அடுத்த பிறப்பு பாழாகும்,'' என, பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குர் சாபம் கொடுத்துஉள்ளார்.

குற்றச்சாட்டுமஹாராஷ்டிராவின் மாலேகானில், 2008ல் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில் கைதான, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரக்யா தாக்குர், உடல்நலக் குறைவை காரணம் காட்டி ஜாமின் பெற்றார்.இந்நிலையில், சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள காளி கோவிலுக்கு சென்ற பிரக்யா, அங்கு பெண்களுடன் உற்சாகமாக கபடி விளையாடினார். இந்த 'வீடியோ' வெளியாகி, பிரக்யாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக் குறைவு என பொய் கூறி, பிரக்யா ஜாமின் பெற்றதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், போபாலில் நடந்த தசரா விழாவில் பிரக்யா பேசியதாவது:காளி கோவிலுக்குச் சென்ற போது, அங்கு விளையாடிய சிலர், கபடி போட்டியை துவக்கி வைக்கும்படி அன்புடன் அழைத்தனர். அதன்படி நான் அடியெடுத்து துவக்கி வைத்த சில வினாடி காட்சியை ஒருவர் படமெடுத்து பரப்பியுள்ளார். என் விளையாட்டு அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால் இதை செய்துள்ளார்.

தவ வாழ்வுஅவர் ஒரு ராவணன். கலாசார சீரழிவு பாவத்தை அவர் போக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் இறுதிக் காலத்தில் துன்பப்படுவார். தேச பக்தர்கள், புரட்சியாளர்கள் மட்டுமின்றி அவர்களை விட மேலான சாதுக்களுடன் மோதுவோர், அது ராவணனாக இருந்தாலும், கம்சனாக இருந்தாலும், வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பொதுமக்களுக்காக நான் தவ வாழ்வு வாழ்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே பிரக்யாவின் மூத்த சகோதரி உப்மா தாக்குர் கூறும்போது, ''மஹா., போலீசார் விசாரணையின் போது பிரக்யாவை துாக்கி வீசியதால், அவரின் தண்டுவடம் இடம் பெயர்ந்துள்ளது. ''இதனால் எந்த நேரத்தில் வலி வரும் என தெரியாத நிலையில் அவர் உள்ளார்,'' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  ஹிஹிஹி

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  எந்த தண்டனையாக இருந்தாலும், அவர் சுயநினைவுடன் இருக்கும் அதே பிறவியில் தன்னடனை கொடுத்தால் தான், தான் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்துவான். அடுத்த பிறவியில் அவன் என்னவாக பிறந்தால் என்ன? எந்த நாயாவது போன பிறவியில் நான் என்ன குற்றம் செய்தென் என வருந்துகிறதா?

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  நீ குண்டு வைத்ததை ஒருவனும் படம் எடுக்கல..... எடுத்திருந்த உன் வாழ்க்கை இந்த பிறப்பிலேயே பாழாய் போயிருக்கும்

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

   குண்டு வெச்சதை (இந்தம்மா உண்மையா இருந்தா) படமெடுக்க முடிஞ்சவன், அல்லது படமெடுக்க வாய்ப்பிருந்தவன், குண்டு வைக்கும்போதே தடுத்திருக்க மாட்டானா ? அல்லது போலீசின் துணையுடனாவது குண்டு வெடிப்பதை செயலிழக்கச் செய்திருக்க மாட்டானா ? இம்புட்டு அறிவோட சிந்திக்கிற நீ ஐயோ ராசா உனக்கு திருஷ்டி சுத்தி போடணும் மேலயும் ஒரு புத்திசாலித்தனமான கருத்து ஒருவர் எழுதியிருக்கார்

 • அப்புசாமி -

  இவர் கேல் இந்தியாவின் முகம். பெரீவர் ரொம்ப பெருமைப் படணும்.

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  பொய், கொலை போன்ற பஞ்ச மகா பாதகங்கள் செய்துகொண்டு மக்களுக்காக சேவை செய்வதாக ஏமாற்றுபவர்களெல்லாம் என்ன கதி அடைவார்களோ தெய்வத்துக்கே வெளிச்சம்.

Advertisement