dinamalar telegram
Advertisement

மகளை கொன்று தந்தை தற்கொலை மாமல்லபுரம் விடுதியில் சோகம்

Share
மாமல்லபுரம் : மாமல்லபுரம் விடுதியில், ஒன்பது வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை, ஓட்டேரி, பிரிஸ்லி நகரைச் சேர்ந்தவர் மணி மகன் ரவிசந்திரன், 47; தனியார் போக்குவரத்து நிறுவன ஊழியர். இவரது மனைவி, 2018ல், உடல்நல குறைவால் இறந்தார். இவரது மகள் தீட்சிதா, 9. கடந்த 13ம் தேதி, மகளுடன் மாமல்லபுரம் வந்த ரவிச்சந்திரன், தனியார் விடுதியில் தங்கினார். மாமல்லபுரம் சிற்பங்களை, மகளுடன் கண்டுகளித்து, அவருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்தார்.நேற்று முன்தினம் இரவு, விடுதி கட்டணம், 5,045 ரூபாயை செலுத்தி, நேற்று காலி செய்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை, சென்னை உறவினருக்கு தான் இறக்க உள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் தெரிவித்து, மொபைல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்துஉள்ளார்.இதை தாமதமாக அறிந்த உறவினர், செக்ரடேரியட் காலனி போலீசில் புகார் அளித்த நிலையில், மாமல்லபுரம் போலீசாருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டது.போலீசார், நேற்று மாலை விடுதி அறையை திறந்து பார்த்த போது, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தில், 'வாழ்க்கையில் விரக்தியால், சொல்ல முடியாத காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, குறிப்பிட்டிருந்தது.மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement