dinamalar telegram
Advertisement

தெற்காசிய கால்பந்து இந்தியா சாம்பியன்

Share
மாலே:தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய அணி சாம்பியன் ஆனது. நேற்று நடந்த பைனலில் நேபாளத்தை 3-0 என வீழ்த்தியது.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 13வது சீசன் மாலத்தீவில் நடந்தது. நேற்று நடந்த பைனலில் உலகத் தரவரிசையில் 107வது இடத்தில் உள்ள இந்தியா, 168வது இடத்தில் இருந்த நேபாள அணியை சந்தித்தது. மழை பெய்ய இரு அணி வீரர்களும் தடுமாறினர்.

முதல் பாதி முடிவில் ஸ்கோர் 0-0 என சமனில் இருந்தது.இரண்டாவது பாதி துவங்கிய 3வது நிமிடத்தில் கோடல் கொடுத்த பந்தை பெற்ற இந்தியாவின் சுனில் செத்ரி (48வது), அதை கோலாக மாற்றி அசத்தினர். அடுத்த நிமிடத்தில் இந்தியாவின் முகமது யாசிர் கொடுத்த 'பாசை' வாங்கிய சுரேஷ் சிங், தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.

நேபாள தரப்பில் அடுத்தடுத்து நான்கு மாற்று வீரர்கள் களமிறங்கி போராடினர்.இரண்டாவது பாதி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+1 வது) இந்திய வீரர் சகால் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய அணி 8வது முறையாக (1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2015, 2021) கோப்பை வென்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement