dinamalar telegram
Advertisement

ஓஹோ... நம்ம ஊரு... செம ஜோரு... சுத்திப்பாரு சென்னையில் இந்த பாட்டு தான் இப்ப டிரெண்ட்

Share
Tamil News
ஓஹோ... நம்ம ஊரு... செம ஜோரு... சுத்திப்பாரு... சுத்தம் பாரு...' சென்னை நகரில் பல வீடுகளில் காலை வேளை சமையல் அறையில், ஸ்லோகம் போல பெண்கள் பாடும் பாடல் இது.மாநகராட்சியின், 'பேட்டரி' வாகனத்தில் ஒலிக்கும்


இந்த பாடலை கேட்டு, சுட்டீஸ்களும் உற்சாகமாக உடன் பாடியபடி, குப்பை கொட்ட வருகின்றனர்.இவ்வளவு ஏன், பல வீடுகளில் ஆண்களை நித்திரையில் இருந்து எழுப்பும் பூபாளம் இது தான். சென்னை, மாநகராட்சியில் உள்ள ஏழு மண்டலங்களில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 'உர்பேசர் சுமித்' நிறுவனம் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனத்தின் சார்பில், வீடு வீடாக குப்பை சேகரிப்பாளர்களுக்கு, 'பேட்டரி' வாகனம் வழங்கப்பட்டுள்ளது. துப்புரவு தொழிலாளர், வீடு, வீடாக விசில் அடித்து குப்பை சேகரித்து வந்தனர்.ஒவ்வொரு வீட்டின் முன்னும், துப்புரவு தொழிலாளர்கள் முக கவசம் கழட்டி, விசில் அடித்து வந்தனர்.


பல வீடுகளுக்கு, சேவல் கூவலாக இந்த விசில் எரிச்சலை கிளப்பி வந்தது.விசில் அடிக்க எதிர்ப்பும் கிளம்பியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, அடிக்கடி முக கவசம் கழற்றி, விசில் அடிப்பதும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சிரமமாக இருந்தது.இதையடுத்து, 'பேட்டரி' வாகனங்களில் மணி பொருத்தப்பட்டு அடிக்கப்பட்டது. அதுவும், போதிய பலன் அளிக்கவில்லை.இந்நிலையில், மாநகராட்சி சார்பில் புதிய முயற்சியாக, குப்பை சேகரிக்க பாடல் ஒன்றை தயாரிக்க முயற்சித்தது.சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் சுந்தர், தனது மகன் சச்சின், மாநகராட்சி குப்பை சேகரிப்புக்கு வசதியாக ஒரு பாடல் எழுதி, இசையமைத்து பாடியிருப்பதாக, உயர் அதிகாரிகளிடம் கூறினார்.

அந்த பாடலை கேட்ட மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக ஒப்புதல் அளித்தனர். அந்த ஓஹோ பாடல் தான் சென்னை நகரில் இப்போது 'டிரண்ட்' ஆகி உள்ளது.

இந்த பாடலை உருவாக்கிய சச்சினை பாராட்டி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி சான்றிதழும் வழங்கியுள்ளார்.அசத்தலான பாடல் வரிகள்!ஓஹோ... நம்ம ஊரு... செம ஜோரு... சுத்திப்பாரு... சுத்தம் பாரு... நம்ம சென்னை தான்யா...ஒஹோ, நம்ம ஊரு... நல்ல பேரு... சொல்லும் பாரு... சிங்கார சென்னை தான்யா...துாய்மையான வீதி தான்... குப்பை வண்டியினால தான்... வண்டிக்குள்ள குப்பைய பிரிச்சி போடுங்கண்ணா... சுத்தமான ஊருன்னா நம்ம சென்னை தாங்கண்ணா...வீட்டை போல நாட்டையாக்க ஒன்றாய் சேர்வோம் வா...ஓஹோ... நம்ம ஊரு... செம ஜோரு... சுத்திப்பாரு... சுத்தம் பாரு... நம்ம சென்னை தான்யா!

- நமது நிருபர்- - '
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ரமா, VA,Usa - chidambaram,இந்தியா

    இந்த பாட்டை கேட்டால் சென்னையை பிடிக்காதவர்களுக்கும் கூட சென்னை பிடித்துவிடும். வெல்டன் சச்சின். சூப்பர்.

Advertisement