dinamalar telegram
Advertisement

பிரிட்டன் எம்.பி., கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு

Share
லண்டன்:பிரிட்டனில் எம்.பி. கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி. டேவிட் அமெஸ் 69, தன் சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் நேற்று முன்தினம் தொகுதி மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த 25 வயதான இளைஞர் ஒருவர் டேவிட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின் அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த கொலையில் மதம் சார்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement