dinamalar telegram
Advertisement

பட்டாசு தடையை நீக்க பன்னீர்செல்வம் யோசனை

Share
Tamil News
சென்னை:டில்லி உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி, அம் மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தீபாவளி என்றாலே பட்டாசும், அது அதிகஅளவில் தயாரிக்கப்படும் இடமான சிவகாசியும் தான் நினைவிற்கு வருகின்றன. இதன் வாயிலாக, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவதுடன், தமிழக பொருளாதாரமும் மேம்படுகிறது. தற்போது, அந்த தொழிலே முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டு இருப்பது, கவலை அளிப்பதாக உள்ளது.

இந்த ஆண்டு, டில்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.தமிழக முதல்வரும், மேற்கண்ட மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.ஆனால், இதற்கு அந்த மாநிலங்கள் செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை.

எனவே, முதல்வர் உடனே தலையிட்டு, சிவகாசியில் பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்கப் படுகின்றன என்பதையும், காற்று மாசு ஏற்படாது என்பதையும் தொலைபேசியிலோ அல்லது அமைச்சர்களை அனுப்பியோ, உண்மை நிலையை அந்தந்த மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.அம்மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Mannandhai -

    மெடிக்கல் ரெப்ரெசெண்டேடிவ்ஸ் மாதிரி ஒவ்வொரு மினிஸ்டரும் ஆளுக்கொரு பை கழுத்துல டை கட்டிக்கிட்டு ஒவ்வொரு ஸ்டேட்டா போயி பட்டாசுக்கு கேன்வாஸ் பண்ணனும் போல . . .

  • S.Pandiarajan - tirupur,இந்தியா

    ஏற்கனவே எழுதி அனுமதியும் கொடுத்தாச்சு நீங்க போய் பொன்விழா கொண்டாடுங்க

  • அன்பு - தஞ்சை,கனடா

    பட்டாசு தொழில் ஒரு நச்சு தொழில். அது வேலை செய்பவர்களையும் பாதிக்கும். அதனால் சுற்றுசூழலிற்கு கடுமையான பாதிப்புகள் வருகின்றன. மேலும் பல விலங்கினங்கள் வெடி சத்தத்தால், உணவு தேடுவதை விட்டு அலறி போய் பதுங்கின்றன. யாருக்கும் நல்லது செய்யாத தொழில். இந்த வேலை இல்லையெனில், வேறொரு வேலையை தேடி கொள்வார்கள். கொலை செய்வதும், கஞ்சா கடத்துவதும் சிலருக்கு தொழில் தான். ஆனால் சமூகத்தில் அனுமதிக்க முடியாது. அது போன்று தான் பட்டாசு தொழிலும். பட்டாசு தொழில் வேண்டாம்.

    • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

      பட்டாசு நச்சு தொழில் க்ரிஷம்ஸுக்கு மட்டும் போடலாம் . தினமும் ஓடும் கார் ஸ்கூட்டர் இவற்றின் காற்றில் அமிர்தம் கலக்கிறது அது மனித உயிரை காப்பாற்றும்

Advertisement