dinamalar telegram
Advertisement

ஒற்றுமையாக இருப்போம்! காங்., செயற்குழு கூட்டத்தில் சோனியா பேச்சு

Share
Tamil News
''அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கட்சியை வளர்க்க முடியும். கட்சிக்கு நான் தான் முழுநேர தலைவி. வெளிப்படைத் தன்மையை வரவேற்கிறேன். அதேநேரத்தில், கட்சி பிரச்னைகளை ஊடகங்கள் வழியாக பேச வேண்டிய அவசியம் இல்லை,'' என, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா பேசினார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ராகுல், பிரியங்கா, அந்தோணி, குலாம்நபி ஆசாத் உட்பட 53 தலைவர்கள் பங்கேற்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்த கூட்டத்தில் சோனியா பேசியதாவது:

ஒரே குரல்மிகவும் சவாலான காலத்தில் இருக்கிறோம். இருப்பினும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சி நலனை மட்டுமே கருத்தில் வைத்து செயல்பட்டால் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். அப்போது தான் கட்சியை வளர்க்க முடியும். வெளிப்படைத் தன்மையை வரவேற்கிறேன். அதேசமயம், ஊடகங்கள் வழியாக பேச வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையாக, நியாயமாக அனைத்து பிரச்னைகளையும் இங்கேயே பேசலாம். நான்கு சுவர்களுக்குள் இங்கு பேசப்படுவது, வெளியில் ஒரே குரலாக எதிரொலிக்க வேண்டும்.

பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட பொதுச்சொத்துக்களை மத்திய அரசு விற்கிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் சமூக நலன்களுக்கானவையே தவிர, வர்த்தகத்துக்கானவை அல்ல.ஆனாலும் மோடி அரசுக்கு தெரிந்ததெல்லாம் 'விற்பனை, விற்பனை, விற்பனை' மட்டுமே. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் சாமானிய நடுத்தர மக்கள் அவதிப்படுகின்றனர்.
சில நிறுவனங்களின் லாப நோக்கத்திற்காக விவசாய சட்டங்களை பார்லி.,யில் அதிரடியாக நிறைவேற்றியதால் கொந்தளிப்பு நிலவுகிறது. இதனால் நடந்த போராட்டங்களை மத்திய அரசு எப்படி கையாள்கிறது என்பதை லக்கிம்பூர் சம்பவம் காட்டுகிறது.கடந்த முறை செயற்குழு கூட்டத்தில் கேட்டுக் கொண்டதால் தடுப்பூசி கொள்கையை மாற்றி, தடுப்பூசிகளை மத்திய அரசே வழங்கியது. இந்த ஒரு விஷயத்தை மட்டும் தான் காது கொடுத்து அரசு கேட்டது. அதனால் தான் நாடு பலன் அடைந்தது.அனைவரும் வற்புறுத்தியதால் தான் 2019ல் இடைக்காலத் தலைவர் பதவியை ஏற்றேன். கொரோனா பரவலால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.

தெளிவு பிறக்கும்அமைப்புத் தேர்தல்கள் உட்பட அனைத்தும் முடித்ததும் புதிய தலைவர் விஷயத்தில் தெளிவு பிறக்கும். நீங்கள் அனைவரும் அனுமதித்தால், நான் தான் கட்சி விவகாரங்களை கையாளும் முழுநேரத் தலைவி என கூறிக் கொள்வேன்.கொரோனா, விவசாயிகள் போராட்டம், எல்லையில் ஊடுருவல், விலைவாசி உயர்வு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என எல்லா தேசிய பிரச்னைகள் குறித்தும் அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம்.இதுகுறித்து ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் ஆலோசனை செய்து வருவதுடன், பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


செயற்குழு கூட்டம் குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என, குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 23 பேர் ஏற்கனவே போர்க்கொடி துாக்கினர். இவர்கள், ஜி 23 குழு தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். நேற்று நடந்த கூட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இவர்களும், 'தலைவர் பதவியை உடனடியாக ராகுல் ஏற்க வேண்டும் அல்லது உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் வரையிலாவது செயல் தலைவர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து ராகுல் பேசும்போது, ''நான் தலைவராக வேண்டுமென நீங்கள் வைக்கும் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிக்கிறேன்.

''அதேநேரத்தில் கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கை ஆகியவை குறித்து சில முக்கிய தலைவர்களது நிலைப்பாடுகளில் ஒருவிதமான தெளிவை எதிர்பார்க்கிறேன்.''அவர்களின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை குறித்த தெளிவு எனக்கு கிடைத்த பின், தலைவர் பொறுப்பை ஏற்பது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்,'' என்றார். கட்சியின் முழுநேரத் தலைவர் யார் என்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் அது குறித்த ஆலோசனைக்கே சோனியா வழி விடவில்லை. ராகுல் தலைமை பொறுப்பை ஏற்கும் வரை, தானே முழுநேரத் தலைவர் என அறிவித்தும் விட்டார்.சோனியா காட்டும் இந்த உறுதியின் பின்னணியில் காரணம் உள்ளது. ராகுல் தான் அடுத்த தலைவர் என்றாலும், இன்னும் மூத்த தலைவர்கள், இளைஞர்களிடையே பிரச்னை இருந்து வருகிறது. மூத்த தலைவர்கள் பலரும் பா.ஜ.,வின் சித்தாந்த ஆதரவாளர்களாக உள்ளதாக ராகுல் சந்தேகப்படுகிறார்.


இந்த கோபமும், சந்தேகமும்தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்.இப்படிப்பட்டவர்களை நம்பி கட்சிப் பொறுப்பை ஏற்றால் காலை வாருவர் என்பதாலேயே, ராகுல் நிபந்தனை விதிக்கிறார். இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்ட பின் தான், தலைமை பொறுப்பை ராகுல் ஏற்பார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்தாண்டு தேர்தல்


காங்., பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, விவசாய சட்டங்கள் மற்றும் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் குறித்து மூன்று தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஆக., 21 லிருந்து, செப்., 20 க்குள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். காங்., மூத்த தலைவர் அம்பிகா சோனி கூறுகையில், ''ராகுல்தான் தலைவராக வேண்டுமென்பது ஒட்டுமொத்த கருத்து. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரது உரிமை,'' என்றார்.முன்னாள் சபாநாயகர் மீராகுமார் கூறுகையில், ''புதிய தலைவர் யார் என்பதற்கான விடை கிடைத்துவிட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருமே ராகுல் பெயரை மட்டும் தான் கூறினர்,'' என்றார். - நமது டில்லி நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (14 + 38)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  காங்கிரஸ் கட்சிக்கு நாடு பூரா உள்ள சொத்து உடமையாக்க துடிக்கிறது. உண்மையான தேச பற்று என்று எல்லாம் ஒன்றும் கிடையாது. சொத்து தான் தேசத்தை போடும்வரை கைய் மாறக்கூடாது. குடும்பத்திற்குள் பிடி இருக்க வேண்டும் என்ற நள் எண்ணம்.உடல் நலம் இடம் கொடுக்காத நிலையிலும் தெரிந்தும் கெட்டியாக பதவியை பிடித்து கொண்டு காங்கிரசை ஒரு வழியாக குழியில் தள்ளி மண்போட்டு மூடினாவுடன் தான் இத்தாலிக்கு புறப்படும்.

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  அடுத்த தேர்தலிலும் பிஜேபி தடையின்றி ஜெயிக்கலாம். நாட்டுக்கு நல்லது. கான் கிராஸ் ஆல் இந்த தேசத்துக்கு இதைவிட என்ன நல்ல காரியம் செய்துவிட முடியும்? காரிய கமிட்டி ன்னா சும்மாவா? அம்மா பிள்ளைகள் மேல உள்ள கேஸை சமாளிக்க தலைமை பதவி முக்கியம். காரியம் முடிஞ்சாச்சு. காப்பியை குடிச்சுட்டு கெளம்புங்கப்பா.....

 • DVRR - Kolkata,இந்தியா

  சொன்னது "ஒற்றுமையாக இருந்தால் தான் கட்சியை வளர்க்க முடியும். கட்சிக்கு நான் தான் முழுநேர தலைவி".உண்மை "ஒற்றுமையாக இருந்தால் தான் கமிஷனை வளைக்க முடியும். கட்சிக்கு நான் தான் முழுநேர தலைவலி". கொஞ்சம் பிரிண்டிங்கில் எழுத்துப்பிழையாக இருந்தது திருத்தப்பட்டது அவ்வளவே.

 • r ravichandran - chennai,இந்தியா

  வங்க தேசத்தில் இந்து கோயில்களும், இந்து மதத்தினர் தாக்கபடுகின்றனர். அதற்கு ஒரு கண்டனமோ அல்லது அனுதாப தீர்மானம் நிறைவேற்ற படவில்லை செயற்குழுவில்.

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

   இந்துக்களையும் இந்து கோயிலையும் தாக்கியதற்கு கண்டனமும் அனுதாபமும் எதிர்பார்க்கும் அளவுக்கு உண்மையிலேயே நம்நாட்டில் மதசார்பின்மை குரைந்துவிட்டது என்பதை நினைத்து உள்ளபடியே மனம் வருந்துகிறேன்.......

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  பூனைக்கு மணி கட்டுவது யார் என்று தெரியாமல் காங்கிரஸ் திணறுகிறது.. சோனியா காங்கிரசுக்கு வந்த பின் கட்சி பல பிளவுகளை சந்தித்து உள்ளது..சரத் பவார், மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி, இப்போ பஞ்ஜாபி கேப்டன் .கட்சியே கரைந்து விட்டது..இந்த செயல்கள் சொல்வது என்ன.?.. காங்கிரஸ் இந்திய கட்சியாக இருக்க சோனியா அல்லது அவரது குடும்பம் தலைமை தாங்க கூடாது..இதை சோனியாவிடம் யார் சொல்வது.?. இங்கு கூடும் எல்லோரும் சோனியா கலீல் விழும் அடிமைகள்..இவர்கள் எப்படி சோனியாவாள் தான் காங்கிரஸ் அழிகிறது என்று சொல்வார்கள்..அப்படி சொன்னாள் அவர்களை துரத்தி விடுவார்கள்..அப்போ காங்கிரஸ் கட்சி .இந்தியாவில் இருக்காது..இதற்க்கு மாற்றாக இப்போ ஆம். ஆத். மி -(AAM ) கட்சி உருவாகிறது..உலகம் போற்றும் காந்தி இருந்த கட்சி மறுபடியும் அந்நியர் கையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறது..

Advertisement