dinamalar telegram
Advertisement

காங்., கட்சித் தலைவராகும் முடிவை பரிசீலிக்கும் ராகுல்..!

Share
டில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் மீண்டும் தான் கட்சித் தலைவராகப் பதவியேற்க பலர் விரும்புவதை அடுத்து அதனை பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் வடமாநிலங்களில் அகில இந்திய காங்கிரஸ் கூட்டணி, பாஜ., கூட்டணியிடம் படுதோல்வியைத் தழுவியது. இதற்குப் பொறுப்பேற்று கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ராகுல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூடியது. இதில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியிலிருந்து செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் சோனியாவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காங்கிரஸ் முக்கிய தலைவரான கே.சி.வேணுகோபால் கூறுகையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஒருமனதாக மீண்டும் ராகுலையே தலைவராகத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

எப்போது தலைவர் பதவி ஏற்கவேண்டும் எனத் தீர்மானிப்பது ராகுலின் விருப்பம் என்றும், அவர் மீண்டும் தலைவர் பதவி ஏற்க வேண்டும் என்றும் மூத்த காங்கிரஸ் உறுப்பினர் அம்பிகா சோனி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ராகுலை உடனடியாக தலைவர் பதவி ஏற்க வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில் தலைவர் பதவி ஏற்பது குறித்து பரிசீலிக்க உள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (30)

  • theruvasagan -

    கும்பிட போன தெய்வம குறுக்கே வந்த மாதிரி தலைமை பொறுப்பை ஏற்பது பற்றி பரிசீலிக்கிறேன்னு சொல்லி எங்க வயித்தில பால் வார்த்தீங்க. அப்படியே கட்சிக்கும் சேர்த்து பால் ஊத்திட்டா இந்தியாவின் எதிர்காலம் ஔிமயமா இருக்கும். இத மட்டும் செஞ்சா ஒங்க குடும்பத்துக்கு கோடானு கோடி புண்ணியம். கட்டாயம் செய்வீங்க.

  • பேசும் தமிழன் -

    பலர் விரும்புவதால்.... யாரும் விரும்ப வில்லை.... அம்மாவும் மகனும் சேர்ந்து நாடகம் போடுகிறார்கள்.... இல்லாத கான் கிராஸ் க்கு தலைவர் பதவியை விடாப்பிடியாக பிடித்து கொண்டு இருப்பதற்கு காரணம் இல்லமால் இல்லை.... இவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அறகட்டளை சொத்துக்கள் வேறு யார் கைகளுக்கு போய் விடக்கூடாது என்பதற்காக தான்

  • அப்புசாமி -

    நோகாம அடிக்கிறேன். ஓயாம அழுவறேன். போகாம வருகிறேன். கதைதான். இவனுங்களே திரும்பத் திரும்ப வருவாங்க. ஆண்ட பரம்பரை இல்லியோ ஓய்...

  • Engineer - California,யூ.எஸ்.ஏ

    Yappa dai.....congress koncham uyir valattum.......nee koncham rest edu

  • எஸ் கிருஷ்ணன் - ,

    காந்தி கனவு நனவாகிறது.

    • sridhar - Chennai,இந்தியா

      நல்லது நடக்கட்டும் ….பிஜேபிக்கு .

Advertisement