dinamalar telegram
Advertisement

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்டு படை

Share
கோட்டயம்: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக, கோட்டயம் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.அங்கு 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேரை காணவில்லை. 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.. கூட்டிக்கல் கிராமத்தில் பலப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 வீடுகள் அடித்து செல்லப்பட்டன


அந்த பகுதியில் அரசின் உதவியை எதிர்பார்த்து 60க்கும் மேற்பட்டோர் காத்திருப்பதாக அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார்.

கோட்டயம் மாவட்டத்தில் மீட்பு பணிகளுக்காக ராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவி நாடப்பட்டு உள்ளது. இதனால், ராணுவ குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.

இடுக்கி மாவட்டம் பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் 10 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம்புலன்ஸ், படகு உள்ளிட்டவற்றுடன் ஆலப்புழா, எர்ணாகுளம் பகுதிகளில் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

அணைகள் திறப்புகேரளாவில் பெய்து வரும் கனமழையால் 22 முக்கிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது மேலும் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம், கோட்டயம் மாவட்டங்களிலும் மீட்புபணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
மிக கனமழை காரணமாக, மணிமலயார் மற்றும் மீனச்சில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடம்நோக்கி சென்றுள்ளனர்.

இதனிடையே, பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாட்டில் ஆரஞ்சு அலர்ட்டும், கண்ணூர் மற்றும் காசர்கோட்டில் மஞ்சள் நிற அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (22)

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  இதில் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் அவர்கள் தத்தம் இறைவனை வேண்டி இருப்பார்கள் எந்த இறைவனும் குறைந்த பட்சம் தனது மதத்து பக்தர்களைக் கூட காப்பாற்றவில்லை ஏன் ?

 • சம்பத் குமார் -

  1). கேரளா மக்கள் விரைவில் இந்த பிரச்சினையில் இருந்து வடுபட்டு வெளியில் வர நாம் எல்லோரும் ஐயப்பனிடம் வேண்டி கொள்வோம்.2). இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகிலே அதிக சுயநலம் பிடித்த மண்டை கருவும் பிடித்த மக்கள் மலையாளிகள் என்று கூறினால் மிகையாகாது.4). கேரளாவில் சிறு குறு ஆறுகள் அதிகம். மலைகாலங்களில் தண்ணீர் அதிகமாக ஒடும்.5). இந்த ஆறுகள் ஒன்று கடலில் அல்லது தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆறுகளுடன் கலக்க வேண்டும்.6). இதனை மறித்து அணைகள் கட்டி தண்ணியை திருப்பி கேரளாவிற்குள் விட்டார்கள்.7). அதன் பலனை தற்பொழுது அனுபவிக்கிறார்கள். வினை ஒன்று விதைத்தால் திணை ஒன்றா முளைக்கும். நன்றி ஐயா.

 • SRIDHAAR.R - Trichy,இந்தியா

  பெருமாளே இந்த மக்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளளையும் காப்பாற்றுங்கள்

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  இங்கே அறிவாளிகள் என்னவோ அய்யப்பன் எதிர்ப்பு

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

   சரி சரி நீதான் அறிவாளின்னு ஒத்துக்கிட்டோம் இந்தா கோலி குண்டு ஓரமா போயி விளையாடு

 • ஆரூர் ரங் -

  சுப்ரீம் கோர்ட் சபரிமலையில் இனி பெண்களை😛 அனுமதிப்பார்களா ? இல்லை சோழி உருட்டி பிரசன்னம் பார்ப்பார்களா 😉😉?

  • தமிழ்ச்செல்வன் - Chennai

   மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொண்டுவந்து கொட்டும் நற்செயல் இந்தக் கொடும் மழையால் பாதிப்படைந்தது

Advertisement