dinamalar telegram
Advertisement

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை: மேலும் 2 ஹிந்துக்கள் கொலை

Share
டாகா: வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில், 2 ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.


வங்கதேசத்தில், ஹிந்து கோவில்கள் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டன. துர்கா பூஜையை சீர்குலைக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், போலீசாருக்கும், வன்முறைக் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பதற்றம் அதிகமுள்ள 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெகும்கன்ஜ் பகுதியில் உள்ள கோயிலில் நவராத்திரி பண்டிகையின் 10ம் நாள் சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த பகுதிக்கு வந்த 200க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கோயில் மீது தாக்குதல் நடத்தினர். கோயில் நிர்வாக உறுப்பினராக உள்ளவரை அடித்தே கொன்றனர். மற்றொருவரின் உடல் குளம் அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.




ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை துவங்கியதை தொடர்ந்து 12க்கும் மேற்பட்ட நகரங்களில் மோதல் வெடித்தது. ஹாஜிகன்ஜில், கோயில் மீது தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்,4 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

 • சம்பத் குமார் -

  1). வங்க தேசத்தில் இது சீனா மற்றும் பாகிஸ்தானின் உள்குத்து வேலையாக ஆகும்.2). அடுத்த வருடம் தேர்தல் வர உள்ளதால் இப்பொழுதே எதிர்கட்சிகள் இந்த வேலையை தொடங்கிவிட்டது.3). தற்போதைய பிரதமர் இந்தியா சார்ந்து முடிவுகளை எடுப்பதும் ஒரு காரணமாக வைத்து எதிர்கட்சிகள் மக்களை உசுப்பேத்தி வருகின்றனர். பின்புலத்தில் சீனா பாகிஸ்தான்.4). நமது மத்திய அரசாங்கம் உறுதியான முடிவுகளை ஆரம்பத்திலே எடுக்க வேண்டும்.5). முஸ்லீம் நாடுகளை நம்ப கூடாது. தங்கள் ஆதயதாதிற்கு எந்த பக்கம் வேண்டுமானாலும் மாறிவிடுவார்கள். 6).அவர்களே தங்களிடம் அல்லது தங்கள் மதத்தில் குறை உள்ளத்தை அறிவார்கள். அதை உலகம் இப்பொழுது உற்று பார்ப்பது போன்ற குற்ற உணர்வு அவர்களுக்கு. அவர்களுடைய சித்தாந்தம் நவீன உலகில் பொய் என்று நிருப்பிக்கப்பட்டதால் அந்த இயலாமையின் விளைவே இந்த குண்டு வெடிப்புகள், சூசைட் பாம், மசூதிகளில் சுடுவது, மற்ற மதம் மற்றும் மதத்தினரை விமர்சிப்பது அல்லது அவர்களுடன் தகராறு பண்ணுவது என திசை திரும்பி இருக்கிறார்கள். காலம் அவர்களை குணப்படுத்தி நல்வழி படுத்தும், நன்றி ஐயா.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  நடுவண் அரசு இந்த விஷயத்தில் வாங்க தேச அரசை கண்டிக்க வேண்டும். துயரப்படும் நமது மக்களை இறைவருள் சாந்தப்படுத்தட்டும்.

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  மைனாரிட்டிகளின் சொத்து மற்றும் பிஸ்னஸ் கைப்பற்ற நடத்தப்படும் நாடகம் ..மைனாரிட்டி வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுவார்கள் ..பிறகு ஷியா சன்னி என்று ஒருத்தொருக்கொருதத்தர் அடித்துக்கொள்வார்கள்

 • திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா

  இதெல்லாம் இந்தியாவில் மேற்கு வங்கம், கேரளம், தமிழகம்(சிறு உதாரணம் ராமலிங்கம்) உட்பட ஏற்கனவே ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கிறது, மற்ற மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருப்பதால் கொஞ்சமாக இருக்கிறது, ஆனால் எத்தனை வருடங்கள் என்று தெரியாது,

 • Papayee Veerappan -

  ஓசி சோறு எங்கப்பா...???

  • Priyan Vadanad - Madurai

   என்னப்பா, அவ்வளவு பசியா? ஓசி சோறுக்கு அலையுறீங்க.

Advertisement