dinamalar telegram
Advertisement

முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு டெங்கு

Share
புதுடில்லி: முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 89, கடந்த சில நாட்களாக, உடல்நலப் பிரச்னைகளால் அவதியுற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் சரியான போதும் 13ம் தேதி மாலை அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடல் பலவீனமடைந்தது; உணவு உண்ண முடியாமல் திரவ உணவை மட்டுமே அவர் எடுத்து வந்தார். இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.




இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மன்மோகன் சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அவரது உடல்நிலையும் மேம்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • S Bala - London,யுனைடெட் கிங்டம்

    தனது மதத்தின் நான்காயிரம் பேரை கொலை செய்த கடசியின் பிரதமராகவும் உலகமகா ஊழல்களை நிறைவேற்றிய அரசின் தலைவராகவும் இரண்டு லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட உதவியாகவும் இருந்த மகான்.

  • சம்பத் குமார் -

    1). Sir, Get well soon.2). டெங்கு காங்கிரஸ் கவர்மென்ட் காலத்தில் வந்தது. இன்னுமா உள்ளது.3). வசதியான மாளிகையில் வாழும் இவர்களை எப்படி டெங்கு கொசு தாக்குகிறது என்று இறைவனுக்கு தான் வெளிச்சம். நன்றி ஐயா.

  • Radhakrishnan - ,

    அவரை கடித்த கொசு இன்னும் உயிரோட இருக்குமா?

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    பாவம் அந்த டெங்கு

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    காமராஜை போல் உங்களை தோற்கடித்து இன்று இந்தியாவே அல்லோகல படுது , ஒரு PSU அரசிடம் இல்ல எல்லாம் தாரை வார்த்து விட்டார் மோடிஜி

    • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

      டீம்கா அடிமைக்கு காமராஜர் எப்படி தோற்றார் என்றே தெரியவில்லை உன் டீம்கா எஜமானர்களின் பேச்சில் மயங்கித்தான் காமராஜரை டுமீலன் தோற்கடித்தான்

Advertisement