dinamalar telegram
Advertisement

ஒரு பெண் உட்பட 3 வீரர்களை சொந்த விண்வெளி நிலையத்துக்கு அனுப்பிய சீனா

Share
பீஜிங்: ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை, லாங்கு மார்ச்-2 எப் என்ற ராக்கெட் மூலம் சீனா தன் சொந்த விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனா தனக்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது. இதற்காக ராக்கெட்டுகள் மூலம் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான தளவாடங்களை விண்வெளிக்கு சில மாதங்களுக்கு முன் சீனா அனுப்பியது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் விண்வெளி குழுவினரை சீனா அங்கு அனுப்பி வருகிறது. அவர்கள் 3 மாதங்கள் அங்கு தங்கி விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை செய்த பின் பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில் ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை மீண்டும் தனது விண்வெளி நிலையத்துக்கு லாங்கு மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் சீனா அனுப்பியது. நள்ளிரவு ஏவப்பட்ட இந்த ராக்கெட், ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து இது 6.30 மணி நேர பயணத்துக்கு பின் சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அமெரிக்காவை நாங்கள் மிஞ்சிவிட்டோம் என்று காட்டத்தான் இப்படி ஒரு விளம்பரம். சீனாவிடம் இருக்கும் தொழில் நுணுக்கத்தில் 99% அமெரிக்காவையும், மேலை நாடுகளையும் காப்பி அடித்தது. ஒரிஜினலாக சீனாவிடம் குறிப்பிடும் அளவில் எந்தத்தொழில் நுணுக்கமும் கிடையாது - காப்பி அடிக்கும் திறமை தவிர.

  • SUBBU - MADURAI,இந்தியா

    திரும்பி வருவதற்கு ஏதாவது வழி இருக்கா?

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

    PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    இதுபோல நாமும் அருணன் ஆம்னி வள்ளி, முத்தரசன் மூவரையும் மேல அனுப்ப திட்டமுள்ளதா?

  • திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா

    சீனன் மத்தவங்களுக்கு குப்பை பொருட்களை ஏற்றுமதிசெய்வான், தனக்கு காப்பியடிப்பதை பக்காவாக செய்துகொள்வான்,,,,,

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      அவன் காப்பி அடித்தாலும், பக்காவாக அடிக்கிறானுங்க.

Advertisement