ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்திய அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
அ.தி.மு.க.,வை கொசு தாங்குவதா ?
அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதில், சசிகலாவும் ஒருவர். அப்படி இருக்கையில், யானை பலம் கொண்ட அ.தி.மு.க.,வை கொசு தாங்குவதாக நகைச்சுவையாக உள்ளது. சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். அ.தி.மு.க.,வில் சசிகலாவிற்கு இடமில்லை. அ.ம.மு.க.,வில் இடமிருந்தால் , அதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பரபரப்பு
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கும் வரலாம் என தொண்டர்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனையடுத்து அவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
,அது எப்படிங்க நம்ம நாட்டில் மட்டும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஒரு நபரை அரசியலில் வரவேற்கிறோம் ? பொது வாழ்க்கைக்கே தகுதியில்லாத ஒரு நபரை பொதுமக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டாமா ?