dinamalar telegram
Advertisement

போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் சேதத்தால் அச்சம்

Share
கரூர்: கரூரில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் சேதமடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மழை பெய்து வரும் நிலையில் போலீசார் அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டடத்தில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்துக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் மாற்றப்பட்டது. தற்போது, அந்த கட்டடம் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் போலீசார் அச்சத்தில் உள்ளனர். போக்குவரத்து போலீசாருக்கு வெளியிடத்தில் பணி என்றாலும், காலை மற்றும் இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும். மேலும், போலீஸ் ஸ்டேஷனில், ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் எந்நேரமும் பணியில் இருப்பர். இந்நிலையில் சேதமடைந்த கட்டடத்தில் மழை பெய்யும் நிலையில், லேசாக தண்ணீர் ஒழுகும் நிலை உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement